பருப்பு உருண்டை குழம்பு

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

பருப்பு உருண்டை குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1 கப் கடலைப்பருப்பு
  2. 1/2 கப் துவரம்பருப்பு
  3. 1 தக்காளி
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 5 வரமிளகாய்
  6. 10 பூண்டு பல்
  7. 1/2 ஸ்பூன் சோம்பு
  8. 1/4 ஸ்பூன் ஜீரகம்
  9. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  10. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 3 ஸ்பூன் மல்லித்தூள்
  12. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  13. 6 ஸ்பூன் தேங்காய் துருவல்
  14. 2 ஸ்பூன் எண்ணெய்
  15. தேவையான அளவு உப்பு
  16. ஒரு கொத்து கறிவேப்பிலை கொத்தமல்லி
  17. எலுமிச்சை அளவுபுளி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடலைப் பருப்பையும், துவரம் பருப்பையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். புளியை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.

  2. 2

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய், பூண்டு பல், சீரகம், கால் ஸ்பூன் சோம்பு போட்டு அரைக்கவும்.

  3. 3

    பிறகு அதே மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பருப்பை தண்ணீர் வடித்து விட்டு அதில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

  4. 4

    அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை, உருண்டைக்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் போட்டு ஒன்று சேர்த்து பிசையவும்.

  5. 5

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

  6. 6

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சோம்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.

  7. 7

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெந்தயம், சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.

  8. 8

    பிறகு ஊற வைத்த புளியை கரைத்து அதில் ஊற்றி மிளகாய் தூள் மல்லித் தூள் போடவும்.

  9. 9

    பிறகு மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.குழம்பு கொதி வந்தவுடன் வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

  10. 10

    பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு பரிமாறவும்.

  11. 11

    சுவையான பருப்பு உருண்டை குழம்பு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes