சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை கழுவி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 2
பின்னர் கொட்டைகளை நீக்கி, துண்டுகளாக நறுக்கி தயாராக வைக்கவும்.
- 3
வெந்தயம்,கடுகு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து சூடு ஆரியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக பொடித்துக்கொள்ளவும்.
- 4
புளியை சூடான தண்ணீரில் சேர்த்து மூடி வைக்கவும். பின்னர் கரைத்து,வடித்து எடுத்து தயாராக வைக்கவும்.
- 5
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும்,கடுகு,வற்றல், கறிவேப்பிலை தாளித்து வேக வைத்து நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காயை சேர்க்கவும்.
- 6
ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- 7
பின்னர் புளிக்கரைசல் சேர்த்து வதக்கவும்.
- 8
பச்சை வாசம் போகும் வரை வதக்கி, அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 9
ஐந்து நிமிடங்கள் வதங்கியவுடன் கடுகு,வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 10
இரண்டு நிமிடங்கள் கலந்து,எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கினால் நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.
- 11
தயாரான நெல்லிக்காய் ஊறுகாயை சூடு ஆறியதும் எடுத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.
- 12
சத்தான,மிகவும் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் இதே போல் அனைவரும் செய்து சுவைக்கவும்.
Top Search in
Similar Recipes
-
-
-
எலுமிச்சை ஊறுகாய் (lemon pickle) (Elumichai oorukaai recipe in tamil)
#homeஎலுமிச்சை எல்லா காலத்திலும் எல்லா கடைகளிலும் கிடைக்கும் ஒரு அதிசயக்கனி.இதில் வைட்டமின் C, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. எலுமிச்சை சாறு பித்தத்தை குறைக்கும். தோலில் வரும் கரும்புள்ளிகள், சுருக்கங்களை குறைக்கும். நிறைய சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தின் ஊறுகாயும் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
-
பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் (Periya nellikaai oorukaai recipe in tamil)
தற்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊறுகாய் Srimathi -
-
-
-
ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3 Fathima's Kitchen -
-
-
-
-
-
-
விட்டமின் 'சி' ஊறுகாய் (Vitamin C oorukaai recipe in tamil)
#arusuvai4ஊரெங்கும் கொரோனா தலை விரித்துத் தாண்டவமாடுகிறது. கொரோனாவை எதிர்க்கத் தேவையான விட்டமின்களில் ஒன்றான 'சி' விட்டமின் நம்முடைய உணவுப் பொருட்களில் நிறைந்துள்ளது. மாத்திரைகளாக எடுப்பதற்கு மாற்றாக பெரிய நெல்லிக்காய்களைப் பயன் படுத்தி ஊறுகாய் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் 'சி' யை நேரடியாகப் பெறலாம். Natchiyar Sivasailam -
-
-
-
நெல்லிக்காய் ஃப்ரை
#GA4 சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி ஊறுகாயும் இல்லை தொக்கும் இல்லை இனிப்பு காரம் புளிப்பு கலந்து செமயா இருக்கும் சும்மாவே சாப்பிடலாம் இத செய்து டப்பாவில் போட்டு வைத்து தேவையான போது வத்த குழம்புக்கு எதுவும் இல்லை என்றால் இதை சேர்த்து செய்யலாம் நெல்லிக்காய் எண்ணெயில் பொரிந்தது மொறு மொறு என்று காரம் உப்பு தூக்கலாக மைல்டா இனிப்பா செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
நெல்லிக்காய் தொக்கு
#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது. Gayathri Vijay Anand -
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (4)