பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 200 கிராம் பனீர்
  2. 4 தக்காளி
  3. 4 பெரிய வெங்காயம்
  4. 50 கிராம் முந்திரி
  5. தலா 2 பட்டை கிராம்பு ஏலக்காய்
  6. 1 ஸ்பூன் மல்லித் தூள்
  7. 2 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  8. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 1/2 ஸ்பூன் சீரகத் தூள்
  10. 2 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  11. தேவையான அளவுஉப்பு
  12. 150 கிராம் வெண்ணெய்
  13. 2பிரியாணி இலை
  14. 1 ஸ்பூன் ஷாஜீரா
  15. 4 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    பனீரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் 25 நிமிடங்கள் வரை ஊறவிடவும் வெங்காயம் தக்காளி பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு 5_8 நிமிடங்கள் வரை வேகவிட்டு தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும் பின் தக்காளி தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்

  2. 2

    பின் சிறிது பட்டர் விட்டு சூடானதும் பிரியாணி இலை ஷாஜீரா சேர்த்து பொரிய விடவும் பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பட்டரை மொத்தமாக போடாம சிறிது சிறிதாக சேர்த்து வதக்கவும் மசாலா பச்சை வாசனை போக 8_10 நிமிடங்கள் வரை வதக்கவும் அவ்வப்போது பட்டர் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    பின் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மல்லித் தூள் சீரகத்தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்

  5. 5

    பின் பனீரை சேர்த்து மெல்லிய தீயில் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும் பனீரை சேர்த்த பிறகு கிளற கூடாது மெதுவாக திருப்பி விடவும்

  6. 6

    பின் கஸ்தூரி மேத்தியை உள்ளங்கையில் வைத்து கசக்கி தூவி விடவும் பின் ப்ரஷ் க்ரீம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்

  7. 7

    சுவையான ஆரோக்கியமான மணமான பனீர் கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes