வஞ்சிரம் மீன் வறுவல்(vanjaram fish fry recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#vn

வஞ்சிரம் மீன் வறுவல்(vanjaram fish fry recipe in tamil)

#vn

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3/4கிலோ வஞ்சிரம் மீன்
  2. 2ஸ்பூன் சோளமாவு
  3. 2மேசைக்கரண்டி கடலைமாவு
  4. 1மேசைக்கரண்டி அரிசி மாவு
  5. 3ஸ்பூன் மிளகாய் தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 3ஸ்பூன் மல்லி தூள்
  9. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 1/2ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  11. 1/2ஸ்பூன் கரமசாலா
  12. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள்,உப்பு, அரிசி மாவு, கரமசாலா, மல்லி தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசறி கொள்ளவும்.

  2. 2

    பிறகு இதில் கடலைமாவு, சோளமாவு, அரிசி மாவு சேர்த்து தண்ணீர் லேசாக விட்டு கெட்டியாக பிசைந்து ஒவ்வொரு மீன் துண்டுகள் மீதும் எல்லா பக்கங்களிலும் மசாலா படும் படி தடவி ஒரு தட்டில் எடுத்து வைத்து குறைந்தபட்சம் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான வஞ்சிரம் மீன் வறுவல் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes