பூசணிக்காய் பாயாசம் (Poosani Payasam Recipe in TAmil)

Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
UAE

பூசணிக்காய் பாயாசம் (Poosani Payasam Recipe in TAmil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60-80 நிமிடம்
3 பேருக்கு பரிமாறலாம்
  1. 1/2 கிலோமஞ்சள் பூசணிக்காய்
  2. 1 கப்ஜவ்வரிசி
  3. 1/2 கிலோவெல்லம்
  4. 1 1/2 கப்தேங்காய் பால்
  5. 2 மேஜைக்கரண்டிநெய்
  6. 10முந்திரி
  7. 15உலர் திராட்சை
  8. 3ஏலக்காய்
  9. தேவைக்கேற்பதண்ணீர்

சமையல் குறிப்புகள்

60-80 நிமிடம்
  1. 1

    முதலில் பூசணிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கி அதை வெட்டி வைத்து கொள்ளவும்.. அதனை ஒரு குக்கரில் போட்டு த்ண்ணீர் விட்டு 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்...பின்னர் அதனை மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்....

  2. 2

    பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் வெல்லம் போட்டு அதனை உருக்கி வடிக்கட்டி வைத்து கொள்ளவும்...

  3. 3

    ஒரு குக்கரில் தண்ணீர் விட்டு ஜவ்வரிசியை வேக வைக்கவும்...

  4. 4

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு அதில் 5 மேஜைக்கரண்டி துருவிய பூசணிக்காயை சேர்த்து நன்றாக கிளறிய பின்பு அதனுடன் வேக வைத்திருக்கும் பூசணிக்காயை சேர்த்து கிளறவும்...

  5. 5

    அதனுடைய பச்சை வாசனை போன பின்பு அதில் உருக்கிய வெல்லம் மற்றும் வேக வைத்த ஜவ்வரிசி சேர்த்து கிளறவும்...

  6. 6

    இப்போது அதில் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.. பின்னர் இறுதியாக முதலாம் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்..அதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும்...

  7. 7

    ஒரு வாணலியில் நெய், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாகும் வரை கிளரவும்...அதனை இப்போது பாயாசத்தில் சேர்க்கவும்

  8. 8

    இப்போது சுவையான பூசணிக்காய் பாயாசம் தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
அன்று
UAE

Similar Recipes