ஸ்விட் பிரட் பால்ஸ் (Sweet Bread Balls Recipe in tamil)

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

ஸ்விட் பிரட் பால்ஸ் (Sweet Bread Balls Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. ஸ்டஃபிங்:
  2. 1/4கப்தேங்காய் துறுவல்
  3. சிறிதுபச்சை உணவு நிறம்
  4. 1 மேசை கரண்டிநெய்
  5. 2 மேசை கரண்டிசர்க்கரை
  6. சிறிதுபாதாம்,முந்திரி
  7. பால்ஸ்
  8. 6பிரட் துண்டுகள்
  9. 3 மேசை கரண்டிபால்
  10. 1மேசை கரண்டிநெய்
  11. சர்க்கரை பாகு:
  12. 1/4கப்சர்க்கரை
  13. 3 மேசை கரண்டிதண்ணீர்
  14. 1/4தேக்கரண்டிஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலில் நெய் சேர்த்து பாதாம்,முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி பின் பச்சை உணவு நிறம்,சர்க்கரை சேர்த்து வதக்கினால் ஸ்டஃபிங் ரெடி.

  3. 3

    ஒரு வாணலில் சர்க்கரை,தண்ணீர் சேர்த்து,சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வந்தவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்தக்கொள்ளவும்

  4. 4

    பிரட் தூண்டுகளின் ஓரங்களை வெட்டி,மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்

  5. 5

    அரைத்த பிரட்டுடன் பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  6. 6

    இந்த மாவை உருண்டைகளாக்கி அதனுள் ஸ்டஃபிங் வைத்து நன்கு உருட்டிக் கொள்ளவும்

  7. 7

    ஒரு வாணலில் எண்ணெயை சூடாக்கி தயார் செய்த உருண்டைகளை மிதமான சூட்டில் பொன்நிறமாக பொரித்துக் கொள்ளவும்

  8. 8

    பொரித்த உருண்டைகளை இளம் சூட்டில் இருக்கும் சர்க்கரை பாகில் நன்றாக புரட்டி எடுத்தால் சுவையான பிரட்பால்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes