சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#வெங்காயரெசிப்பிஸ்
ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப்

சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)

#வெங்காயரெசிப்பிஸ்
ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35-40 நிமிடங்கள
3 பரிமாறுவது
  1. 3/4கிலோ சிக்கன்
  2. 2பெரிய வெங்காயம் பெரிதாக நறுக்கியது
  3. 1குடைமிளகாய் பெரிதாக நறுக்கியது
  4. 1/2கெட்டித் தயிர்
  5. 2பச்சை மிளகாய் அல்லது காரத்திற்கு ஏற்ப
  6. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 4ஸ்பூன் எண்ணெய்
  9. 1/2கப் புதினா இலைகள்
  10. 1எலுமிச்சம் பழம்
  11. 1ஸ்பூன் நாட்டுசர்க்கரை
  12. சிறிய கறிக்கட்டை

சமையல் குறிப்புகள்

35-40 நிமிடங்கள
  1. 1

    புதினா தயிர் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் எலுமிச்சம்பழம் சாறு சேர்த்து நன்றாக அரைத்து சிக்கனில் ஊற வைக்கவும்

  2. 2

    பெரிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயை பெரியதாக நறுக்கிக் கொள்ளவும்

  3. 3

    நீளமான குச்சியில் (நீளமான ஸ்டிக்கை எடுத்து)முதலில் பெரிய வெங்காயம் சேர்க்கவும் பின்னர் குடமிளகாயை சேர்க்கவும் பின்னர் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும் இது போல் மாறி மாறி பெரிய வெங்காயம் குடைமிளகாய் சிக்கன் துண்டுகளை கோர்க்கவும்.

  4. 4

    நான்ஸ்டிக் பேனில் எண்ணெய் சேர்த்து கோர்த்து வைத்திருப்பதை வரிசையாக அடுக்கி சிம்மில் வைத்து நன்றாக அவ்வப்பொழுது திருப்பிவிட்டு வேகவிடவும். (இந்த ஸ்டிக் இல்லாவிட்டால் கடாயில் எண்ணெய் ஊற்றி குடைமிளகாய் சிக்கன் வெங்காயத்தை ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்)

  5. 5

    நன்றாக வெந்தவுடன் ஒரு ஸ்பூன் நாட்டுசர்க்கரை அதன் மேல் தூவவும். திரும்பவும் இருபுறமும் திருப்பிவிடவும்.சிறிய கரித்துண்டு இதுபோல் தீயில் காட்டி ஒரு சிறிய தட்டில் வைத்து கடாயின் உள்ளே வைக்கவும்

  6. 6

    கடாயின் உள்ளே வைத்த உடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து உடனே மூடி விட்டு அடுப்பை அணைக்கவும்.

  7. 7

    பின்னர் தேவைப்பட்டால் எலுமிச்சம்பழம் பிழிந்து சூடாக பரிமாறவும்.note:: கரிக்கட்டை சேர்ப்பதால் தான் நமக்கு கபாப் டேஸ்ட் கடையில் வாங்குவது போல் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes