ஹெல்தி க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப் (Creamy Sweetcorn soup recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

ஸ்வீட் கார்ன் என்கிற சோளம் உடம்பிற்கு மிகவும் நல்லது அதுவும் இந்த மாதிரி சூப் சென்று சாப்பிடும் போது பசங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.#book

ஹெல்தி க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப் (Creamy Sweetcorn soup recipe in tamil)

ஸ்வீட் கார்ன் என்கிற சோளம் உடம்பிற்கு மிகவும் நல்லது அதுவும் இந்த மாதிரி சூப் சென்று சாப்பிடும் போது பசங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்கள்
  1. ரெண்டு டீஸ்பூன்வெண்ணை
  2. ஒன்னரை டீஸ்பூன்கோதுமை மாவு
  3. ஒரு இன்ச் சைஸ்பட்டை
  4. பால்
  5. 100 கிராம்ஸ்வீட் கார்ன்
  6. தேவையான அளவுஉப்பு
  7. அரை டீஸ்பூன்மிளகுத்தூள்
  8. சிறிதளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்கள்
  1. 1

    முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைக்கவும். அதில் இரண்டு ஸ்பூன் பட்டர் அதாவது வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணை சேர்த்த பிறகு உருகும் நிலையில் ஒரு இன்ச் அளவு பட்டை சேர்க்கவும். அதனுடன் ஒன்றரை ஸ்பூன் அளவு கோதுமை மாவை சேர்த்து நன்கு அதில் கலந்து கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது நன்றாக வெண்ணையுடன் சேர்த்து கோதுமை மாவு நல்ல வாசனை கொடுக்க ஆரம்பிக்கும் அப்பொழுது 200 எம்எல் அதாவது மில்லி பாலை அதில் சேர்க்கவும் 200 மில்லி பாலின் அளவு ஒரு டம்ளர் ஆகும்.

  3. 3

    பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும் கட்டிகள் வர விடாமல் நன்கு கலந்து கிரீமாக ஆக்கவும் நன்கு கட்டிகளில்லாமல் ஆனபிறகு உரித்து வைத்திருக்கும் சோள முத்துக்களை அதில் சேர்க்கவும்.

  4. 4

    சேர்த்து நன்கு கலந்து விடவும் ஐந்து நிமிடத்திலேயே வேகம் கூடியது ஆதலால் இது மிகவும் சுலபமாக தயாராகிவிடும். ஒரு ஐந்து நிமிடம் பிறகு நல்ல கெட்டியாக ஆரம்பிக்கும். பொழுது அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும் தேவைப்பட்டால். இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  5. 5

    இப்பொழுது நம் க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப் நன்றாக தயாராகிவிட்டது இறக்குவதற்கு முன்பு அரை ஸ்பூன் அளவு மிளகுத்தூள் சேர்க்கவும். கொத்தமல்லியைத் தூவி அனைவருக்கும் பரிமாறலாம். இந்த சூப் செய்வதற்கு அதிக நேரம் தேவை இல்லை வெறும் பத்து நிமிடத்திலேயே இந்த சூப் தயார் ஆகிவிட்டம். ஒருமுறை செய்து பாருங்கள் மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப். நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes