எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் - பாலக் கீரை சுத்தம் செய்து நறுக்கியது
  2. 1 கப் - கொண்டைக் கடலை
  3. 1/2 கப் - வேர்க்கடலை
  4. 1- பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  5. 2 தேக்கரண்டி - சில்லி ஃப்ளேக்ஸ்
  6. 1 மேசைக்கரண்டி - மிக்சட் ஹெர்ப்ஸ்
  7. 1 தேக்கரண்டி - மிளகு பொடி
  8. 1 மேசைக்கரண்டி - லெமன் ஜூஸ்
  9. 1 தேக்கரண்டி - கரம் மசாலா
  10. 1 தேக்கரண்டி - இஞ்சி விழுது
  11. தேவையானஅளவு உப்பு
  12. 2 மேசைக்கரண்டி - பிரட் தூள்
  13. மாவு தயாரிக்க
  14. 3 மேசைக்கரண்டி - கோதுமை மாவு
  15. 5-6 மேசைக்கரண்டி - தண்ணீர்
  16. 1- தேக்கரண்டி - மிளகுத்தூள்
  17. 1- தேக்கரண்டி - மிக்ஸட் ஹெர்ப்ஸ்
  18. 1 தேக்கரண்டி - சில்லி ஃப்ளேக்ஸ்
  19. தேவையானஅளவு உப்பு
  20. 1 கப் - பிரட் தூள்
  21. ரோல் செய்ய
  22. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொண்டைக் கடலையை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். வேர்க்கடலையை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    இரண்டும் ஊறியதும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த விழுதோடு நறுக்கிய பாலக், நறுக்கிய பச்சைமிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், மிக்சட் ஹெர்ப்ஸ், தேவையான அளவு உப்பு, லெமன் ஜூஸ், கரம் மசாலா, இஞ்சி விழுது, பிரட் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    கலந்து வைத்துள்ள கலவையை விரும்பிய வடிவில் நக்கெட்ஸ்களாக செய்து கொள்ளவும்.

  5. 5

    கோதுமை மாவு, தண்ணீர், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், மிக்சட் ஹெர்ப்ஸ், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைத்து வைக்கவும்.

  6. 6

    செய்து வைத்துள்ள நக்கெட்ஸ்களை கோதுமை மாவு கலவையில் மூழ்க வைத்து எடுக்கவும்.

  7. 7

    பிரட் தூளில் பிரட்டி எடுத்து ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைக்கவும்.

  8. 8

    அரைமணி நேரத்திற்கு பிறகு நக்கெட்ஸ்களை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  9. 9

    பொரித்து எடுத்த நக்கெட்ஸ்களை தக்காளி சாஸ் அல்லது கெட்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes