முட்டை சில்லி (muttai chilli recipe in tamil)

San samayal
San samayal @cook_20697195
Coimbatore

முட்டை சில்லி (muttai chilli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டை - 4 (வெள்ளை)
  2. மைதா மாவு- 1/4 கப்
  3. கார்ன் ஃப்லர் மாவு - 1/4 கப்
  4. மிளகாய்த்தூள் - 1 டிஸ்பூன்
  5. உப்பு, மிளகு, தண்ணீர்
  6. எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  7. கடுகு - 1/4 டிஸ்பூன்
  8. பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
  9. இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறு
  10. கியது)
  11. பச்சை மிளகாய் -5
  12. சிவப்பு மிளகாய் -4
  13. கருவேப்பிலை - 1 கொத்து
  14. பெரிய வெங்காயம் -3 (நறுகியது)
  15. சீரகத் தூள் - 1/2 டிஸ்பூன்
  16. கரம் மசாலா -1/4 டிஸ்பூன்
  17. மிளகாய் தூள் - 1 டிஸ்பூன்
  18. தக்காளி - 1 (நறுகியது)
  19. எலுமிச்சை - 1/2

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையில் இருந்து வெள்ளை கருவை மட்டும் எடுத்து ஒரு சின்ன மூடியுடன் உள்ள கிண்ணத்தில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து 17-20 நிமிடம் சூடாக்கவும். சூடானதும் இந்த கிண்ணத்தை எடுத்து அதில் வைத்து வேக வைத்து எடுக்கவும். சிறிது நேரம் கழித்து வேக வைத்த முட்டையை ஒரு துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும். அடுத்து சோழ மாவு, மைதா மாவு மிளகாய் தூள், மிளகு தூள் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக கலக்கி வைக்கவும்.

  2. 2

    கலக்கிய மாவில் முட்டை துண்டுகளை போட்டு எண்ணெய் இல் பொரித்து எடுக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, இஞ்சி, பூண்டு, இரண்டு மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். ஒரு நிமிடம் கழித்து வெங்காயம் பொன் நிறம் ஆகும் வரை வனக்கவும், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் தக்காளி சேர்த்து வேக விடவும்..

  3. 3

    எண்ணெய் உம் தக்காளி உம் பிரிந்து வரும் போது பொரித்த முட்டை உப்பு தேவையான அளவு மற்றும் 1/2 பழம் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். முட்டை சில்லி ரெடி வாங்க சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
San samayal
San samayal @cook_20697195
அன்று
Coimbatore

Similar Recipes