சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

எங்க ஊர் சேலம் தட்டுவடை செட் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பதான் பர்கர் பீசா என்று சாப்பிடுறோம். ஆனால் எனக்கு தெரிந்து 20 - 30 வருஷமா எங்க ஊர்ல தட்டுவடையை பர்கர் மாதிரி செய்து சாப்பிடுவது மிகவும் பிரபலம். இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு இன்னிக்கு நான் எனக்கு பிடிச்ச வெஜிடபிள் தட்டுவடை செட் செய்துருக்கென். சிங்கப்பூர்ல இந்த தட்டு வடை கிடைக்காது , அதனால் நான் ஊருக்கு வரும்போது எப்பவும் மிஸ் பண்ணாமல் ஒரு தடவையாவது வீட்டில் செய்து சாப்பிடுவேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. தட்டு வடை ஒரு பாக்கெட்
  2. துருவிய கேரட்& பீட்ரூட்
  3. எலுமிச்சை ஊறுகாய்
  4. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  5. பொடியாக நறுக்கிய தக்காளி
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம்
  7. தேங்காய் /பச்சைமிளகாய் /இஞ்சி அரைத்த விழுது

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் ஒரு பச்சை மிளகாய் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய், இஞ்சி சிறிதளவு, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். படத்தில் உள்ளது போல் காய்கறிகளை துருவி மற்றும் வெட்டி ஒரு தட்டில் ரெடியாக எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு தட்டு வடையில் அரைத்த தேங்காய் பச்சை மிளகாய் விழுது இன்னொரு தட்டு வடையில் எலுமிச்சை ஊறுகாய் தடவி வைக்கவும்.

  3. 3

    துருவிய கேரட்,பீட்ரூட்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி கொத்தமல்லி இலை என்று ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அதன் மேல் இன்னொரு தட்டு வடை வைத்து மூடி தேங்காய் பச்சைமிளகாய் தடவிய தட்டு வடை வைத்து மூடினால் சுவையான தட்டுவடை செட் ரெடி.

  4. 4

    வேண்டுமெனில் இதில் துருவிய மாங்காய் சேர்த்துக்கொள்ளலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Shakti Shivanya
Shakti Shivanya @cook_26242364
இதே சட்னியில்
டிப்ஸ் இருக்கா

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes