பிரட் சாண்ட்விச்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#ஸ்நாக்ஸ் #book
பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். கேரட் குடைமிளகாய் இரண்டும் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. பெரிய கேரட் 3
  2. குடைமிளகாய் 2
  3. பெரிய வெங்காயம் 2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  5. வரமிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  6. கொத்தமல்லி சிறிதளவு
  7. பெரிய ரொட்டித் துண்டுகள் 8

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் நீளவாக்கில் அரிந்த வெங்காயத்தை சேர்க்கவும்.சிறிது வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவும். சன்னமாக அரிந்த குடமிளகாயை சேர்த்த பிறகு துருவிய கேரட்டை சேர்க்கவும். காரத்திற்கு வரமிளகாய்த்தூள் அரை ஸ்பூன் சேர்க்கவும்.

  2. 2

    மேல் கூறிய அனைத்தையும் நிறம் மாறாமல் ஐந்து நிமிடம் வதக்கவும் பிறகு கொத்தமல்லித்தழை சேர்க்கவும்

  3. 3

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏறியவுடன் ஒரு ஸ்பூன் நெய் விடவும்.நெய் சூடு ஆனவுடன் காய்கறிகள் வைத்த ரொட்டித் துண்டை வைக்கவும். அதன் மேல்புறம் இன்னொரு ரொட்டித் துண்டை வைத்து மூடவும். இரண்டு புறமும் திருப்பி போட்டு சிவக்க எடுக்கவும். தட்டில் வைத்து முக்கோண வடிவில் இரண்டாக வெட்டி சாஸுடன் குழந்தைகளுக்கு பரிமாறவும். குழந்தைகளுக்கான சுவையான ஆரோக்கியமான மாலை உணவு தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes