க்ரீமி ப்ரோக்கோலி சூப்/ Creamy Broccoli Soup🥦

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#immunity #book
மனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. ப்ரோக்கோலியில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
கண் பார்வை, இதயம், எலும்பு , செரிமான கோளாறு, என அனைத்திற்கும் ப்ரோக்கோலி மிகவும் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2 ப்ரோக்கோலி/Broccoli
  2. 1டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  3. 4 பல் பூண்டு
  4. 1 வெங்காயம்
  5. 1/4கப் கேரட்
  6. 1/2 கப் பால்
  7. 1கப் தண்ணீர்
  8. தேவைக்கேற்ப உப்பு
  9. 1/2டீஸ்பூன் மிளகுத்தூள்
  10. 1டீஸ்பூன் சோள மாவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    புரோக்கோலி சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்த தண்ணீரில் நன்கு அலம்பி கொள்ளவும். மீண்டும் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் பொன்னிறமாக வதக்கி, பின்பு கேரட் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் அரை கப் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

  3. 3

    பால் கொதி வந்தவுடன் அதில் அரைத்து வைத்த ப்ரோக்கோலி விழுதை, 1 கிளாஸ் தண்ணீர் கலந்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

  4. 4

    தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால் சுவையான ப்ரோக்கோலி சூப் ரெடி. கார்லிக் பிரட் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes