புதினா புலாவ் /Pudina Pulav

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Immunity
#Goldenapron
#Book
புதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது .

புதினா புலாவ் /Pudina Pulav

#Immunity
#Goldenapron
#Book
புதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40Mins
2 பரிமாறுவது
  1. 1 கப் பாசுமதி ரைஸ்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1 உருளைக் கிழங்கு
  5. 3டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 2 கிராம்பு
  7. 1/2 இன்ச் பட்டை
  8. 1 ஏலக்காய்
  9. உப்பு
  10. அரைக்க
  11. 1 கட்டு புதினா
  12. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  13. 1 பச்சை மிளகாய்
  14. தாளிக்க
  15. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  16. ஆயில் 1 டேபிள் ஸ்பூன்
  17. 2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    பாசுமதி அரிசி 1 கப் எடுத்து கழுவி தண்ணீர் 2 கப் ஊற்றி ஊற விடவும்.புதினா 1 கட்டு வாங்கி கழுவி வைக்கவும்.

  2. 2

    இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன் அரைத்து வைக்கவும்.தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து வைக்கவும்.பட்டை 1/2 இன்ச், ஏலக்காய் 1,கிராம்பு 2,பச்சை மிளகாய் 1,தக்காளி 1 எடுத்து வைக்கவும்.உருளைக் கிழங்கு கட்டமாக நறுக்கி வேக விட்டு வடித்து வைக்கவும்.

  3. 3

    பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும். தக்காளி 1 கழுவி நறுக்கி வைக்கவும்.

  4. 4

    கழுவிய புதினா பச்சை மிளகாய் 1, தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைக்கவும்.குக்கரில் நெய் 1 டேபிள் ஸ்பூன்,ஆயில் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சிபூண்டு விழுது வதக்கி,நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  5. 5

    அதில் அரைத்த புதினா விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி வெந்த உருளைக் கிழங்கு சேர்த்து கலக்கி ஊறிய அரிசியை சேர்த்து கலக்கி விட்டு தண்ணீர் 2 கப் ஊற்றி உப்பு சேர்த்து 4 விசில் விடவும்.20 நிமிடம் கழித்து திறந்து கிளறி விட்டு, எடுத்தால் சுவையான புதினா புலாவ் ரெடி.தயிர் பச்சடி, டொமட்டோ சாஸ் வைத்து சாப்பிடலாம்.சுவை சூப்பர்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
potato udan peas serthal innum suvai koodum.3 spoon ginger garlic paste needed?

Similar Recipes