தேவையான பொருட்கள்

  1. 3 கேரட்
  2. 50 கிராம் ஜவ்வரிசி
  3. 4 ஸ்பூன் நெய்
  4. 1/2 லிட்டர் பால்
  5. 7 ஸ்பூன் சர்க்கரை
  6. 4 ஏலக்காய்
  7. முந்திரி தேவையான அளவு
  8. திராட்சை தேவையான அளவு
  9. அரைக்க :
  10. 6 முந்திரி
  11. 10 பாதாம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்வோம். அதே வாணலியில் கேரட்டை வறுத்து எடுத்துக் கொள்வோம். பிறகு இரண்டு ஸ்பூன் நெய் விட்டு ஜவ்வரிசியை வறுத்து கொள்வோம்.

  2. 2

    சூடான பாலை ஊற்றி நன்கு கலக்கி, ஜவ்வரிசி வெந்ததும் கேரட்டையும் சேர்த்து வேக வைத்துக் கொள்வோம்.ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாமை தோல் நீக்கி, முந்திரி பருப்பையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து சேர்த்து கொள்வோம்.

  3. 3

    கடைசியாக வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கி சூடாக சுவைத்தால் பாயாசம் சுவையாக இருக்கும். குறிப்பு : ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் அருந்தலாம். 🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes