எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பெரிய கேரட் - 3
  2. கடலை மாவு - 1 கப்
  3. அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு - தேவைக்கு
  5. சோடாப் பொடி - 1/4 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  7. காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
  9. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  10. பெப்பர் தூள் - 1 டீஸ்பூன்
  11. எண்ணெய் - 1 டீஸ்பூன்
  12. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேரட்டை தோல் சீவி விட்டு இரண்டாக வெட்டி கனம் குறைத்து ஸ்லைஸாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    பெப்பர் தூள்,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து இந்த பேஸ்டை ஸ்லைஸ் செய்து வைத்திருக்கும் கேரட்டில் நன்றாகப் புரட்டி 10 நிமிடம் வைக்கவும்.

  3. 3

    பத்து நிமிடம் கழித்து இந்த கேரட்டை ஸ்டீமரில் வைத்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.

  4. 4

    கேரட் வெந்து மிருதுவானதும் இறக்கவும்.

  5. 5

    ஒரு பவுளில் கடலை மாவு, அரிசி மாவு,சோடாப் பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,காயத்தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவைக்கு உப்பும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பருவத்தில் கலக்கிக் கொள்ளவும்.

  6. 6

    ஒரு பேன் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஆவியில் வேக வைத்த கேரட்டை எடுத்து ஒவ்வொன்றாக அந்த மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    வித்தியாசமான சுவையில் கேரட் பஜ்ஜி ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes