ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#nutrient1
prorein rich gravy, My innovative recipe

ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)

#nutrient1
prorein rich gravy, My innovative recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6முட்டை -
  2. 2வெங்காயம் -
  3. 1தக்காளி -
  4. 1 டீஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது
  5. 1 டீஸ்பூன்மிளகாய்தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுஎண்ணெய்
  8. சிறிதளவுமல்லிதழை
  9. வறுத்து அரைக்க
  10. 1 சீரகம்மிளகு
  11. 1/2 சீரகம்சீரகம்
  12. 1/2 சீரகம்சோம்பு
  13. சிறுதுண்டுபட்டை
  14. 1/2 டீஸ்பூன்கசகசா
  15. 1 டேபிள்ஸ்பூன்தேங்காய் துருவல் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

  2. 2

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் நடுவே சிறிய பாத்திரத்தில் எண்ணெய் தடவி அடித்த முட்டையை ஊற்றி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் வேகவிடவும்.

  3. 3

    பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறியபின்னர் முட்டையை தனியே எடுத்து விருப்பமான அளவில் வெட்டிக்கொள்ளவும்

  4. 4

    வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்து கொள்ளவும்.

  5. 5

    .வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கி தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.

  6. 6

    பின்னர் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.

  7. 7

    பின்னர் சிறிதளவு தண்ணீர்,உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பின் சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரிந்த பின் முட்டை துண்டுகள் சேர்த்து 1 நிமிடம் வைத்திருந்து மல்லிதழை தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes