இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Nutrient1

ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் .

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40Mins
2 பரிமாறுவது
  1. 1/2 கப் துவரம் பருப்பு
  2. 12 சிறிய வெங்காயம்
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. சிறிய எலுமிச்சை அளவுபுளி
  7. உப்பு
  8. வறுத்து அரைக்க
  9. 1டீஸ்பூன் ஆயில்
  10. 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  11. 1 1/2டீஸ்பூன் தனியா
  12. 1டீஸ்பூன் சீரகம்
  13. 1/2 டீஸ்பூன் மிளகு
  14. 5 வரமிளகாய்
  15. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  16. தாளிக்க
  17. 2டீஸ்பூன் ஆயில்
  18. 1டீஸ்பூன் கடுகு
  19. கருவேப்பிலை
  20. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    துவரம் பருப்பு 1/2 கப் கழுவி குக்கரில் 4 விசில் விட்டு வேக விடவும்.வறுத்து அரைக்க தனியா 1 1/2 டீஸ்பூன்,கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,1 டீஸ்பூன் சீரகம்,1/2 டீஸ்பூன் மிளகு வரமிளகாய் 5 எடுத்து வைக்கவும்.

  2. 2

    புளி சிறிய எலுமிச்சை அளவு கழுவி ஊற விடவும்.கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு வறுத்து அரைக்க தனியா,கடலை பருப்பு சீரகம்,மிளகு,வரமிளகாய் 2, டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

  3. 3

    கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன் கருவேப்பிலை சிறிது,நறுக்கிய பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் தக்காளி 2, சேர்த்து வதக்கி வெந்த பருப்பில் அரைத்த விழுது உப்பு சேர்த்து கலக்கி கொதிக்க விட்டு புளி கரைத்த தண்ணீர் 1/2 கப் ஊற்றி விடவும்.

  4. 4

    கலக்கி 1 விசில் விட்டு இறக்கவும்.சுவையான சாம்பார் ரெடி.காலை உணவிற்கு உளுந்து வடை,இட்லி தோசைக்கு ஏற்றது.

  5. 5

    சாம்பார் இட்லி,குட்டி இட்லி செய்தும் சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.செய்து சுவைத்திடுங்கள்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes