மாங்காய் பிரியாணி (Maangaai biryani Recipe in Tamil)

Sharadha (@my_petite_appetite)
Sharadha (@my_petite_appetite) @cook_23303136

மாங்காய் ஸிஸனில் ௨ௗ்ௗதால் சுவையான பிரியானி செய்யும் விதிமுறைகளை பகிர்கிறேன். எளிதில் மிகவும் குறைந்த பொருளை கொண்டு ருசியான இந்த பிரியாணியை செய்து மகிழுங்கள். #deeshas

மாங்காய் பிரியாணி (Maangaai biryani Recipe in Tamil)

மாங்காய் ஸிஸனில் ௨ௗ்ௗதால் சுவையான பிரியானி செய்யும் விதிமுறைகளை பகிர்கிறேன். எளிதில் மிகவும் குறைந்த பொருளை கொண்டு ருசியான இந்த பிரியாணியை செய்து மகிழுங்கள். #deeshas

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
4 ஆட்களுக்கு தேவையான அளவு
  1. 1 கப் பாஸ்மதி அரிசி
  2. 1மாங்காய்
  3. 2பச்சை மிளகாய்
  4. 1டீஸ்பூன் சோம்பு
  5. தேவைக்கேற்ப உப்பு
  6. 4டீஸ்பூன் எண்ணெய்
  7. 2 கிராம்பு
  8. 1பட்டை
  9. 2நட்சத்திர சோம்பு
  10. 1டீஸ்பூன் கடுகு
  11. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  13. 1 1/2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    1 கப் அரிசியை நன்கு அலசி தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊர வைக்கவும்.

  2. 2

    ஒரு மிக்சியில் 1 மாங்காய்யின்துண்டு, சோம்பு, மிளகாய் மற்றும் உப்பு வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணை ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மிளகாய் தூள், கடுகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    கடுகு வெடித்ததும் மாங்காய் விழுது சேர்த்து நன்றாக எண்ணை தனித்து வரும் வரை வதக்கவும்.

  5. 5

    1 கப் ஊர வைத்த அரிசியை நன்றாக பிழிந்து இதில் சேர்த்து நன்கு கலந்து பின்னர் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி மிதமான சூட்டில் 30 நிமிடங்கள் சமைக்கவும்.

  6. 6

    மூடியை அகற்றி நன்கு கிளறவும். தண்ணீர் நன்கு வரற்றி அரிசி நன்கு வென்று இருக்கும்.

  7. 7

    சுவையான மாங்காய் பிரியாணி தயார். தயிர் பச்சடி உடன் இன்னும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharadha (@my_petite_appetite)
அன்று

Similar Recipes