வெங்காய சாதம்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#nutrition 2 வெங்காயத்தில் தாதுஉப்புக்கள் ,புரதச்சத்துக்கள் ,வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன. வெங்காயத்தில் இன்னும் நிறைய பலன்கள் இருக்கின்றன.

வெங்காய சாதம்

#nutrition 2 வெங்காயத்தில் தாதுஉப்புக்கள் ,புரதச்சத்துக்கள் ,வைட்டமின்கள் நிறைய இருக்கின்றன. வெங்காயத்தில் இன்னும் நிறைய பலன்கள் இருக்கின்றன.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேருக்கு பரிமாறலாம்
  1. 1 ஆழாக்கு அரிசி
  2. 4 ஆழாக்கு தண்ணீர்
  3. 4 பெரிய வெங்காயம்
  4. 4 துண்டு பட்டை
  5. 4 கிராம்பு
  6. 1/2டீஸ்பூன் சோம்பு
  7. 2 வர மிளகாய்
  8. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியைக் கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பட்டை, கிராம்பு,சோம்பு, வரமிளகாய் ஆகியவற்றை வறுத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை நன்கு வதக்கவும். அதில் உப்பு சேர்க்கவும். வறுத்த பட்டை, கிராம்பு,சோம்பு, வரமிளகாயை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு அரிசி சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து அரிசியில் சேர்க்கவும்.

  4. 4

    குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும். சுவையான வெங்காய சாதம் தயார். சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes