ஆப்கான் சிக்கன் கிரேவி (Afghan chicken gravy Recipe in Tamil)

Pavithra Dharmalingam
Pavithra Dharmalingam @cook_23491980

ஆப்கான் சிக்கன் கிரேவி (Afghan chicken gravy Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஊறவைக்க :2 மணிநேரம்           சமைக்க: 1/2 மணிநேரம்
1/2 கிலோ சிக்கன்
  1. 3 தே.க இஞ்சி பூண்டு விழுது
  2. 8 ப.மிளகாய்
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 1/2 கட்டு கொத்தமல்லி தழை
  5. 1மே. கரண்டி மிளகுத்தூள்
  6. 1மே.கரண்டி கரம் மசாலா
  7. 1தே.கரண்டி சாட் மசாலா
  8. 1 எலும்ச்சம்பழத்தின் சாறு
  9. 1 கப் பால்
  10. 1 கப் தயிர்
  11. 2 கப் சமையல் எண்ணெய்
  12. தே.அளவு உப்பு
  13. 1/4 கப் கசகசா, முந்திரி விழுது

சமையல் குறிப்புகள்

ஊறவைக்க :2 மணிநேரம்           சமைக்க: 1/2 மணிநேரம்
  1. 1

    ப.மிளகாய், நறுக்கிய பெ.வெங்காயம், கொத்தமல்லி தழை மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

  2. 2

    கழுவிய சிக்கனில் அரைத்த விழுது, இஞ்சி பூண்டு விழுது, பால், தயிர், மிளகு தூள், சாட் மசாலா, கரம் மசாலா,முந்திரி கசகசா விழுது, உப்பு இவை அனைத்தும் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்

  3. 3

    இவற்றை சுமார் 2 மணிநேரம் ஊற விடவும்

  4. 4

    ஒரு கடாயில் 1 1/2 கப் எண்ணெய் சேர்த்து சிக்கன் துண்டுகளை மட்டும் நன்கு பொரித்து எடுக்கவும்

  5. 5

    மீதம் உள்ள மசாலா கலவையை தனியாக வேறு கடாயில் 1/2 கப் எண்ணெய் ஊற்றி பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்

  6. 6

    மசாலாவில் நன்கு எண்ணெய் பிரிந்த உடன் பொரித்து வைத்த சிக்கன் துண்டுகளை இதில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வைத்து பரிமாறவும்

  7. 7

    ரொட்டி, நாண், சப்பாத்தி உடன் மிகவும் நன்றாக இருக்கும்

  8. 8

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pavithra Dharmalingam
Pavithra Dharmalingam @cook_23491980
அன்று

Similar Recipes