ஹெல்தியான மாம்பழ அல்வா (Healthiyana maambala halwa recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

கோல்டன் அப்ரன் 17-ஆவது புதிரில் மேங்கோ என்ற வார்த்தையை கண்டுபிடித்தோம் அதை மையமாக கொண்டு இந்த ஹெல்தியான அல்வா ரெசிப்பி செய்திருக்கிறோம் இதில் அயன் கால்சியம் விட்டமின் மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகமாக நிறைந்திருக்கிறது இந்த ஹெல்டி அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. #goldenapron3 #mango #family#nutrient3

ஹெல்தியான மாம்பழ அல்வா (Healthiyana maambala halwa recipe in tamil)

கோல்டன் அப்ரன் 17-ஆவது புதிரில் மேங்கோ என்ற வார்த்தையை கண்டுபிடித்தோம் அதை மையமாக கொண்டு இந்த ஹெல்தியான அல்வா ரெசிப்பி செய்திருக்கிறோம் இதில் அயன் கால்சியம் விட்டமின் மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகமாக நிறைந்திருக்கிறது இந்த ஹெல்டி அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. #goldenapron3 #mango #family#nutrient3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 300 மில்லிபால்
  2. 3ஏலக்காய்
  3. 1 கப்சர்க்கரை
  4. 500 கிராம்மாம்பழம் பல்ப்
  5. 50 கிராம்வரகரிசி பொடி
  6. 50 கிராம்நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அடுப்பில் கடாயை வைத்து அரிசியை போட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும் ஆனால் அதன் கலர் மாற கூடாது.

  2. 2

    இப்பொழுது அந்த வரகரிசியை விசில் போட்டு பவுடராக்கி எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது ஒரு மீடியம் சைஸ் மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதில் மாம்பழ பல்புகளை சேர்த்து மிக்ஸியில் அடித்து கூழாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது அடுப்பில் கடாய் அல்லது பன் வைக்கவும். அதில் 300 மில்லி அளவு பால் சேர்க்கவும்.

  5. 5

    பால் நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்திருக்கும் மாம்பழக் கூழை சேர்க்கவும். சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  6. 6

    தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.மாம்பழம் அரைக்கும் பொழுதே ஏலக்காய் சேர்த்து நான் அழைத்துக் கொண்டதால் தனியாக இப்பொழுது நான் சேர்க்கவில்லை.

  7. 7

    சர்க்கரை சேர்த்துக் கலந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் வரகரிசி பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  8. 8

    வரகரிசி பொடி சேர்க்கும் போது சிறுக சிறுக போட்டு நன்கு கலந்து கொள்ளவும். கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்வது நல்லது.

  9. 9

    இப்பொழுது அல்வா கெட்டியாக ஆரம்பிக்கும். அப்பொழுது நெய் சிறுக சிறுக விட்டு கலந்து கொள்ளவும்.

  10. 10

    கைவிடாமல் நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதம் வரும் வரை.கடாயில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

  11. 11

    சிறிது நேரத்தில் மாம்பழ அல்வா தயாராகிவிட்டது நீங்கள் தேவை என்றால் நட்ஸ்களை சேர்த்துக் கொள்ளலாம்.மிகவும் சுவையான மற்றும் ஹெல்தியான ஹல்வா ரெசிபி இது. இரும்புச் சத்து நார்ச்சத்து வைட்டமின் மினரல்ஸ் போன்ற அனைத்து வகையான சத்துக்களும் இந்த அல்வாவில் இருக்கிறது ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes