முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம்

முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)

சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3-4 பரிமாறுவது
  1. 4 வேக வைத்த முட்டை
  2. முட்டை ரோஸ்ட் :
  3. 1மேஜைகரண்டி எண்ணெய்
  4. 1 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  5. கொஞ்சம்உப்பு
  6. கிரேவி செய்ய :
  7. 3 மேஜைகரண்டி எண்ணெய்
  8. 3 பச்சை மிளகாய்
  9. 1 பட்டை
  10. 4 கிராம்பு
  11. 1நறுக்கிய வெங்காயம்
  12. 1/2 தேக்கரண்டி சீரகம்
  13. 1 தேக்கரண்டி இஞ்சிபூண்டு விழுது
  14. 1நறுக்கிய தக்காளி
  15. 1 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  16. 1 தேக்கரண்டி மிளகாய்தூள்
  17. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  18. தேவைகேற்ப உப்பு
  19. 1கப் தண்ணீர்
  20. 1/2கப் நறுக்கிய கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு வானலியில் எண்ணெய் விட்டு மிதமாக சூடாக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அதில் வேக வைத்த முட்டையை சேர்த்து ரோஸ்ட் செய்து தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    அதே வானலியில் எண்ணெய் விட்டு மிதமாக சூட்டில் மிளகாய், பட்டை, கிராம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

  3. 3

    பிறகு சீரகம், இஞ்சிபூண்டு விழுது, தக்காளி சேர்த்து 4-5 நிமிடம் வேக விடவும்.

  4. 4

    இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

  5. 5

    வேக வைத்த முட்டையை இதில் சேர்த்து முட்டைகளின் மேல் நன்றாக மசாலா சேறும் வரை வேக விடவும்.

  6. 6

    பின் 1கப் தண்ணீர் சேர்த்து 15-20 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும்.

  7. 7

    இறுதியாக நறுக்கி வைத்த கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes