எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 1/4கிலோ முட்டைகோஸ்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1கப் தேங்காய் துருவல்
  5. உப்பு
  6. 3பச்சை மிளகாய்
  7. 2டீஸ்பூன் பொட்டுக்கடலை
  8. 1டீஸ்பூன் சோம்பு
  9. 1டீஸ்பூன் தனியா தூள்
  10. 2பல் பூண்டு
  11. தாளிக்க
  12. 3டீஸ்பூன் ஆயில்
  13. 1பட்டை
  14. 2கிராம்பு
  15. 1ஏலக்காய்
  16. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    1/4 கிலோ முட்டைகோஸ் கழுவி பொடியாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு வடித்து வைக்கவும்.

  2. 2

    பச்சை மிளகாய் 3, சோம்பு 1 டீஸ்பூன்,தனியா தூள் 1 டீஸ்பூன்,பூண்டு 2 பல், தேங்காய் துருவல் 1 கப், பொட்டுக்கடலை 2 டீஸ்பூன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.

  3. 3

    பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கி வைக்கவும்.தக்காளி 2 பொடியாக நறுக்கி வைக்கவும். தாளிக்க பட்டை 1,கிராம்பு 2, ஏலக்காய் 1,கறிவேப்பிலை சிறிது எடுத்து வைக்கவும். கடாயில் ஆயில் 3 டீஸ்பூன் விட்டு பட்டை, கிராம்பு ஏலக்காய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வடித்து வைத்த முட்டைகோஸ் சேர்க்கவும்.நன்கு வதக்கி நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி தண்ணீர் 1/2 கப் சேர்த்து வேக விடவும்.

  5. 5

    வெந்தவுடன் மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்த்து கலக்கி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

  6. 6

    கொதித்தவுடன் இறக்கி கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.சுவையான கோஸ் குருமா ரெடி.சப்பாத்தி பரோட்டாவிற்கு ஏற்றது.சுவை சூப்பர்.நான் கோஸ் குருமா சப்பாத்தி செய்தேன்.👌.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes