Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும்.

Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)

#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3அத்தி பழம்
  2. 4முந்திரி பருப்பு
  3. 4பாதாம் பருப்பு
  4. 1 சிட்டிகை குங்குமப்பூ
  5. 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. 1 டேபிள்ஸ்பூன் நெய்
  7. 1/2 லிட்டர் பால்
  8. 1 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்
  9. 2 டேபிள் ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க்
  10. 3 டேபிள்ஸ்பூன் நாட்டுசர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    அத்தி பழம், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவை மூன்றையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    அத்திப்பழத்தை தனியாக விழுதாக அரைக்கவும்.பாதாம் பருப்பின் தோலை நீக்கி, அதனுடன், முந்திரி சேர்த்து தனியாக விழுதாக அரைத்து வைக்கவும்.

  3. 3

    கடையில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பாதாம் விழுதை சேர்த்து பிஸ்கட் நிறத்திற்கு மாறும் வரை வதக்கவும்.

  4. 4

    பின்பு அதில் அத்திப்பழ விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  5. 5

    பின்பு அதில் அரை லிட்டர் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கிளறி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் பால் பவுடரை கட்டியில்லாமல் கரைத்து அதில் சேர்க்கவும்.

  6. 6

    கைவிடாமல் கலந்துகொண்டு வரவும். பால் சிறிது சிறிது சூடிய உடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும்.

  7. 7

    ரிச்சான அத்திப்பழம் கீர் ரெடி. வீட்டில் நடக்கும் சிறிய விருந்துகளில் இதை செய்து அசத்தலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes