உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா  கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 முருங்கைக்காய்
  2. 1உருளைக்கிழங்கு
  3. 2முந்திரிப் பருப்பு
  4. 1பெரிய வெங்காயம்
  5. 2 தக்காளி
  6. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  8. 1டீஸ்பூன் வீட்டில் அரைத்த கரம் மசாலா
  9. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  10. தேவைக்கேற்ப உப்பு
  11. 3டேபிள்ஸ்பூன் தேங்காய்
  12. 1/2 டீஸ்பூன் சோம்பு
  13. 1டீஸ்பூன் கசகசா

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி, முந்திரி பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மையாக வதக்கவும்.

  2. 2

    தக்காளி நன்கு வதங்கியதும் நீளவாக்கில் அரிந்த உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக் காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி & கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். கிழங்கு மற்றும் முருங்கைக் காய் வெந்தவுடன் தேங்காய் சோம்பு கசகசா அரைத்த விழுதை அதில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். கிரேவி போல் சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes