சுண்டைக்காய் தட்டைப்பயிறு சுண்டல்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

சுண்டைக்காய் தட்டைப்பயிறு சுண்டல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40mins
2 பரிமாறுவது
  1. 1/2கப் சுண்டைக்காய்
  2. 1கப் தட்டைப்பயிறு
  3. 12சின்ன வெங்காயம்
  4. 10பல் பூண்டு
  5. 1/4கப் புழுங்கல் அரிசி
  6. உப்பு
  7. 1நெல்லிக்காய் அளவு புளி
  8. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  10. சிறிதுகறிவேப்பிலை
  11. தாளிக்க :
  12. 4டீஸ்பூன் ஆயில்
  13. 1டீஸ்பூன் கடுகு
  14. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  15. 2வரமிளகாய்
  16. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

40mins
  1. 1

    1/2 கப் சுண்டைக்காயை கழுவி தட்டி அதில் இருக்கும் விதைகளை தண்ணீர் விட்டு கழுவி நீக்கிவிடவும். தட்டைப்பயிறு கடாயில் லேசாக வறுக்கவும்.

  2. 2

    12 சின்ன வெங்காயம்,10 பல் பூண்டு தோல் நீக்கி கழுவி வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வைக்கவும்.பூண்டை தட்டி வைக்கவும். 1 நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைக்கவும். புழுங்கல் அரிசி 1/4 கப் வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் சேர்த்து ரவை மாதிரி பொடித்து வைக்கவும்.

  3. 3

    குக்கரில் தட்டைபயிரை 3 விசில் வேகவிடவும்.கடாயில் 4 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன்,உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்,தாளித்து சிறிது கறிவேப்பிலை வர மிளகாய் 2 கிள்ளியது சேர்த்து நறுக்கிய சின்ன வெங்காயம் பூண்டு சேர்க்கவும்.

  4. 4

    தட்டி வைத்த சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கி விடவும். மஞ்சள்தூள் 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.

  5. 5

    வெந்த தட்டைப்பயிறு தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்து வதக்கவும்.புளியை கரைத்து, புளி கரைசலை 1 கப் சேர்த்து கொதிக்க விடவும். 2 நிமிடம் கழித்து அரைத்து வைத்த புழுங்கல் அரிசியை சேர்த்து கலக்கி விட்டு அடுப்பை சிம்'மில் வைத்து தட்டு போட்டு மூடி வைக்கவும்.

  6. 6

    இரண்டு நிமிடத்தில் தண்ணீர் வற்றியவுடன் நன்கு பிரட்டி 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தேவை என்றால் 2 டேபிள் ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலக்கி இறக்கி விடவும். சுவையான சுண்டைக்காய் தட்டை பயறு சுண்டல் ரெடி😋😋 சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சுண்டல் மாதிரியாகவும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes