சுண்ட வத்தல் தோசை மற்றும் கறிவேப்பிலை முந்திரி சட்னி (Sunda vaththal dosai recipe in tamil)

hema rajarathinam
hema rajarathinam @hemaraja055
Virudhunagar

#arusuvai6 எளிதாக செய்ய கூடிய சத்தான உணவு. ஜீரணத் தன்மைக்கு சுண்ட வத்தல் தோசை மிகவும் நல்லது. தலை முடி வளர கருவேப்பிலை முந்திரி சட்னி சிறந்தது.

சுண்ட வத்தல் தோசை மற்றும் கறிவேப்பிலை முந்திரி சட்னி (Sunda vaththal dosai recipe in tamil)

#arusuvai6 எளிதாக செய்ய கூடிய சத்தான உணவு. ஜீரணத் தன்மைக்கு சுண்ட வத்தல் தோசை மிகவும் நல்லது. தலை முடி வளர கருவேப்பிலை முந்திரி சட்னி சிறந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 20 சுண்ட வத்தல்
  2. 1 சிறிய காய்ந்த மிளகாய்
  3. தேவைக்கேற்ப கருவேப்பிலை
  4. சிறிதளவுதோசை மாவு
  5. சிறிதுகேரட் துருவல்
  6. 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  7. 10 முந்திரி பருப்பு
  8. அரை டீஸ்பூன் மிளகு தூள்
  9. அரை டீஸ்பூன் உப்பு
  10. தேவைக்கேற்ப எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தோசை:சுண்ட வத்தல், மிளகாய் வற்றல் மற்றும் கருவேப்பிலையை கடாயில் வறுக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    தோசை கல்லில் தோசை மாவு ஊற்றி அரைத்த பொருட்கள் மற்றும் கேரட் துருவல் சேர்க்கவும். சுவையான ஆரோக்கியமான சுண்ட வத்தல் தோசை தயார்.

  4. 4

    சட்னி: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, கருவேப்பிலை, முந்திரி மூன்றையும் நன்றாக வறுக்கவும்.

  5. 5

    மிக்ஸியில் வறுத்த பொருட்கள், உப்பு,மிளகுத்தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். சுவையான சட்னி தயார்.

  6. 6

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த தோசை மற்றும் சட்னியும் சுவைத்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
hema rajarathinam
hema rajarathinam @hemaraja055
அன்று
Virudhunagar

Similar Recipes