பாகற்காய் புளி குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813

பாகற்காய் புளி குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100 கிராம் பாகற்காய்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. சிறிதுபுளி
  5. 2 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  6. மஞ்சள் தூள்
  7. பெருங்காயம்
  8. சிறிதுசீரகம்
  9. 5 வெள்ளை பூண்டு
  10. கறிவேப்பிலை
  11. சிறிதுகடுகு
  12. சிறிதுவெந்தயம்
  13. நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்த்து வெட்டி வைத்த பாகற்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

  3. 3

    அதே வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.

  4. 4

    அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், பூண்டு சேர்த்து அரைக்கவும். அதனுடன் புளிக்கரைசல், குழம்பு மிளகாய் தூள், தக்காளி சேர்த்து அரைக்கவும்.

  6. 6

    வெங்காயம் நன்கு வ்தங்கிய உடன் மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் அரைத்து வைத்த கலவை, மற்றும் வதக்கிய பாகற்காய் சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
மீனா அபி
மீனா அபி @cook_21972813
அன்று

Similar Recipes