கோதுமை பாஸ்தா

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#breakfast
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஒரு புதுமையான காலை உணவு. வழக்கமாக இட்லி, தோசை செய்வதற்கு பதிலாக இதனை முயற்சிக்கலாம்.

கோதுமை பாஸ்தா

#breakfast
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஒரு புதுமையான காலை உணவு. வழக்கமாக இட்லி, தோசை செய்வதற்கு பதிலாக இதனை முயற்சிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்
  1. 250கிராம் கோதுமை மாவு
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1பெரிய தக்காளி
  4. 1டீஸ்பூன் மிளகாய்தூள்
  5. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 1டீஸ்பூன் கரம் மசாலா
  8. தேவையான அளவு உப்பு, தண்ணீர்
  9. கொஞ்சம் கொத்தமல்லி, புதினா இலைகள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கோதுமை மாவு மற்றும் தண்ணீரை கெட்டியாகும் வரை கலக்கவும். சப்பாத்திக்கு பிசைவது போல் சாப்டாக தயார் செய்யவும்.

  2. 2

    பின்னர் அதில் இருந்து உருண்டைகளை பிரித்து எடுக்கவும். ஒரு உருண்டை எடுத்து பெரிய சப்பாத்தியாக தேய்த்து மூடி வைத்து சிறு வட்டங்களை எடுத்து தனியே வைக்கவும்.

  3. 3

    முன்னும் பின்னும் கையை வைத்து அழுத்தம் குடுத்து பாஸ்தா வடிவில் தயார் செய்யவும்.

  4. 4

    அடுத்து ஒரு கடாயில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் நன்றாக வேகவைக்கவும்.பின்னர் தண்ணீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.

  5. 5

    அதே கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை வதக்கவும்.பின்னர் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். அடுத்து தக்காளியையும் சேர்த்து வதக்கி 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1/4:டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.

  6. 6

    இப்போது நாம் வேகவைத்த பாஸ்தாவை சேர்க்கலாம். 3 நிமிடம் நன்றாக வதக்கி கடைசியாக கொத்தமல்லி, புதினா இலைகள் போட்டு அடுப்பை ஆப் செய்யவும். சுவையான கோதுமை பாஸ்தா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes