எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  2. 1பெரிய அளவு தக்காளி
  3. தலா 1 டேபிள்ஸ்பூன்வரமல்லி, மிளகு, சீரகம் சம அளவு
  4. 3காய்ந்த மிளகாய்
  5. 5ரச பூண்டு
  6. தலா 1 டீஸ்பூன்மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்
  7. 3/4 லிட்டர்தண்ணீர்‌
  8. தேவைக்கேற்பஉப்பு
  9. கருவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிதளவு
  10. தாளிக்க
  11. 3 டேபிள்ஸ்பூன், நல்ல எண்ணெய்
  12. 1 டீஸ்பூன்கடுகு, வெந்தயம்
  13. வெல்லம் சிறிதளவு ருசிக்கு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ரசம் செய்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம்,பூண்டு, காய்ந்த மிளகாய் 2, வரமல்லி சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும் பிறகு அதனுடன் தக்காளி கருவேப்பிலை கொத்தமல்லி காம்பு சிறிதளவு சேர்த்து விழுதாக அரைக்கவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் 1,கருவேப்பிலை, அரைத்த விழுது, மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.

  4. 4

    வதக்கிய பிறகு அதனுடன் புளி கரைசலை ஊற்றி தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு நுரை கூடி வரும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manickavalli Mounguru
Manickavalli Mounguru @cook_21011967
அன்று

Similar Recipes