மீதமுள்ள சாதத்தில் இனிப்பான நேந்திரன் பழ இலை அடை.

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பேருக்கு
  1. 1கப் மீதமுள்ள சாதம்
  2. 1நேந்திரன் பழம்
  3. 1/2 கப் வெல்லம்
  4. 1/2 கப் தேங்காய் துருவல்
  5. 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. 2ஸ்பூன் நெய்
  7. வாழை இலை
  8. 1/2 கப் அரிசிமாவு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    நேந்திரன் பழத்தை ஆவியில் வேகவைத்து தோல் உரித்து வெல்லத்துடன், ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கிண்டவும். வெல்லம் கரைந்து சேர்ந்து வரும்போது கீழே இறக்கி தேங்காய் துருவல், நெய் சேர்த்து கிளறி ஆற விடவும்

  2. 2

    சாதத்தை மிக்ஸில் போட்டு தண்ணி விடாமல் மசித்துக்கவும். அத்துடன் தேவையான அரிசியை மாவு சேர்த்து சப்பாத்திமாவேன் விட கொஞ்சம் தளர்த்தியாக மாவு பிசைந்துக்கவும். கையில் ஒட்டாமல் வறது மாதிரி..

  3. 3

    ஒரு வாழை இலை எடுத்து சின்னதாக கட் பண்ணிக்கவும். கையில் கொஞ்ச்ம நெய் தடவிண்டு அரிசியை மாவை நீள வாக்கில் வாழை இலையில் பரப்பி அதின் நடுவில் நேந்திரன் பூரணத்தை வெச்சு இலையை மடக்கி, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வெந்து எடுத்துக்கவும்

  4. 4

    5நிமிடத்தில் சுவையான நேந்திரன் இலை அடை கமா கமா மணத்துடன் தயார் ஆயிடும்.. சாப்பாடை ஒருபோதும் வீணாக்க கூடாது.. யோசிச்சு ஏதாவதொரு விதத்தில் வீட்டில் உள்ளவங்களுக்கு சுவையாக பண்ணி குடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்..

  5. 5

    நேந்திரன் பழம் உடம்புக்கு ரொம்ப ஹெல்த்தி.. இதில் அரிசி, வெல்லம், தேங்காய் சேரும்போது ரொம்ப போஷாக்கு நிறைந்ததாகவும் ஆகிறது..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes