சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பிரியாணி சட்டியில் எண்ணெய் நெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் சேர்க்கவும், பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பின் சின்ன வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்
- 2
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் அரைத்த கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும் வதங்கிய பிறகு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 3
இப்போது சிக்கனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு இதில் உப்பு மிளகாய்த் தூள் கரம் மசாலா சிக்கன் மசாலா மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்... மசாலா பச்சை வாசனை போன பிறகு தயிர் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்
- 4
எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மூடி போட்டு சிக்கன் 3/4 பாகம் வேக வைக்கவும் (தண்ணீர் ஊற்ற தேவையில்லை சிக்கனில் இருந்து வரும் தண்ணீரை போதுமானதாக இருக்கும்) குறைந்த தீயில் வேக வைக்கவும்
- 5
சிக்கன் முக்கால் பாகம் வெந்த பிறகு நான்கு கப் தண்ணீர் (1000மிலி) தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீரைக் கொதிக்கவிடவும் தண்ணீர் கொதித்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்... தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும் அவ்வப்போது அடிப்பிடிக்காமல் கிளறிக் கொள்ளவும்
- 6
தண்ணீர் 90% வற்றிய பிறகு அதில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு முறை கிளறி விடவும்... இப்போது ஒரு தட்டை வைத்து பிரியாணியை மூடி அதன் மேல் காற்று புகாதவாறு ஒரு கனமான பாத்திரம் வைத்து குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்
- 7
பிறகு அடுப்பை அணைத்து 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து மெதுவாக கிளறவும்
- 8
சுவையான சிக்கன் பிரியாணி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
-
-
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
-
-
-
-
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
-
-
-
-
-
-
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem
கமெண்ட் (2)