மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.
குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. மீதமான சாதம் 1 கப்,
  2. நெய் 6 to 8 ஸ்பூன்,
  3. மைதா மாவு 3 ஸ்பூன்,
  4. கார்ன் ஃப்ளோர் 2 ஸ்பூன்,
  5. சர்க்கரை 1 கப்,
  6. தண்ணீர் 2 கப்,
  7. ரோஸ் கலர் எசன்ஸ் 3 to 5 சொட்டு
  8. பிஸ்தா அலங்கரிக்க 2

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மீதமான சாதத்தை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்து வைத்துக் கொள்ளவும். கைகளிலும் பாத்திரத்திலும் ஒட்டாமல் வருவதற்காக நன்றாக நெய் தடவிக் கொள்ள வேண்டும்.

  3. 3

    அதனுடன் மைதா மாவு கான்பிளவர் மாவு மற்றும் ரோஸ் எசன்ஸ் கலந்து பிசைந்து கொள்ளவும். கொஞ்சம் நெய் சேர்த்து ஒட்டாமல் நன்றாக பிசையவும்.

  4. 4

    இந்த மாவை ஒரு 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விடலாம்.

  5. 5

    அடுத்து கையிலும் ஒரு தட்டிலும் நெய் தடவி வைத்து கொண்டு, இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளலாம்.

  6. 6

    பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க வைக்கவும்.

  7. 7

    சர்க்கரை பாகு நன்றாக கொதித்தவுடன், உருட்டிய உருண்டைகளை பொறுமையாக ஒன்றன்பின் ஒன்றாக அதனுள் போடவும்.

  8. 8

    மிதமான தீயில், மூடி போடாமல் 20 நிமிடங்களுக்கு நன்றாக வேகவிடவும்.

  9. 9

    பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிட்டு பிஸ்தா தூவி பரிமாறவும்.

  10. 10

    சுவையான பிங்க் கலர் ரசகுல்லா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes