அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#india 2020
இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள்.

அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)

#india 2020
இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 1டம்ளர் பச்சரிசி
  2. 1/4 டம்ளர் துவரம்பருப்பு
  3. 1.5 ஸ்பூன் மிளகு
  4. 1ஸ்பூன் சீரகம்
  5. 1 கப் தேங்காய்த்துருவல்
  6. 1/2 பெருங்காயத்தூள்
  7. 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  9. உப்பு தேவையான அளவு
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. 1ஸ்பூன் கடுகு
  12. 1ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  13. 1ஸ்பூன் கடலை பருப்பு
  14. 1பச்சை மிளகாய்
  15. 4வரமிளகாய்
  16. 2.3/4டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு டம்ளர் பச்சரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து பிறகு நிழலில் நன்றாக காய வைத்துக்கொள்ளவும் கையில் பிடித்தால் கையில் ஒட்டக் கூடாது அந்த அளவிற்கு காய வைக்கவும்

  2. 2

    கால் டம்ளர் துவரம்பருப்பு, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், இவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய வைத்த அரிசியை துவரம் பருப்புடன் மிக்ஸியில் கரகரப்பாக ஒட்டிக்கொள்ளவும். பிறகு ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். இந்த கலவையை தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளவும். இதனுடன் மீதி அரை ஸ்பூன் மிளகை முழுதாக சேர்த்துக் கொள்ளவும். ஒரு மூடி தேங்காய் துருவி வைத்துக்கொள்ளவும் ஒரு கப் அளவிற்கு.

  3. 3

    இப்போது ஒரு வானலியில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தவும். அதில் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் உளு.பருப்பு,4 வரமிளகாய் ஒரு பச்சை மிளகாய் பெருங்காயத் தூள் அரை ஸ்பூன், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதில் இரண்டே முக்கால் அளவிற்கு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கொள்ளவும். துருவிய தேங்காயை அதில் கொட்டி விடவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். இப்பொது அரைத்த அரிசியைக் கொட்டி நன்கு கிளறி விடவும் கட்டியில்லாமல்.

  4. 4

    கலவை கெட்டியான பிறகு அடுப்பை நிறுத்தி விடவும். இதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்ற. ஒரு குக்கரில் தண்ணீர் சேர்த்து அதில் ஸ்டாண்ட் வைத்து பாத்திரத்திற்கு மாற்றிய அரிசிமாவை அதில் வைத்து ஒரு தட்டு வைத்து மூடவும். குக்கரை மூடி விசில் சேர்க்கவும். மூன்று விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து விடவும். ஆவி அடங்கியவுடன் பாத்திரத்தை எடுத்து ஏற்கனவே வதக்கிய வானலியில் உப்புமாவை அதில் கொட்டி நன்கு ஒரு முறை கிளறிக் கொள்ளவும். உப்புமா நன்கு பொலபொலவென்று இருக்கும்.

  5. 5

    இப்போது தேங்காய் மிளகு வாசத்துடன் கூடிய பழைய கால அரிசி உப்புமா உணவை தட்டில் பரிமாறி அதற்கு சர்க்கரை, புளி கொச்சி, சட்னி, தயிர் இவற்றில் உங்களுக்கு விருப்பமானவற்றை பரிமாறி சாப்பிட கொடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

கமெண்ட் (3)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
meena. I remember the vengala paathiram amma used to cook arisi upuma. Love the kanthal. you are supposed to submit one recipe only for this contest. You are submitting more than one, choose the better recipe. If I were you I will choose the attu kal recipe. Good luck

Similar Recipes