குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)

jassi Aarif
jassi Aarif @1657J

#bake
பீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு (75 கிராம்)
  2. 1/2 கப் பொடித்த சர்க்கரை
  3. 1 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ்
  4. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. ஃபுட் கலர்கள் விருப்பத்திற்கு ஏற்ப
  7. 1/2 கப் உருக்கிய வெண்ணெய் / சன்பிளவர் எண்ணெய்
  8. 1 முட்டை
  9. 1/4 கப் 1 ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் 1/2 கப் சர்க்கரை பொடித்து,முட்டை வெண்ணெய் வென்னிலா எசன்ஸ் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா மூன்றையும் சேர்த்து நன்றாக சலித்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக அடிக்கவும்.(ரொம்ப நேரம் மிக்ஸியில் அடிக்க கூடாது)

  2. 2

    அடித்து வைத்திருக்கும் கலவையை 5 ஆக பிரித்து சிறு கிண்ணத்தில் ஊற்றி ஃபுட் கலர் சேர்த்து லேசாக கலக்கி விடவும்

  3. 3

    ஒரே சைஸில் இருக்கும் பவுலில் பட்டர் தடவி சிறிது மைதா தூவி கலந்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும்.

  4. 4

    குக்கரில் அடுப்பில் சிம்மில் வைத்து உப்பு சேர்த்து,ப்ரிகீட் 10 செய்து 10 நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள கலவையை பேக் செய்து எடுக்கவும்.(உப்பு வாசனை பிடிக்காது என்றால் தண்ணீர் அல்லது எதுவும் சேர்க்காமல் பேக் செய்யலாம்)

  5. 5

    நன்றாக ஆற விடவும்.ஒன்றின் மேல் ஒன்றாக ஃப்ரெஷ் கீரீம் சேர்த்து அடுக்கவும்

  6. 6

    சுற்றிலும் விருப்பத்திற்கு ஏற்ப ஃப்ரெஷ் கீரீம் தடவி அலங்கரித்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்

  7. 7

    வீட்டிலேயே செய்த சுவையான குக்கரில் செய்த ரெயின்போ கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

jassi Aarif
jassi Aarif @1657J
அன்று

Similar Recipes