வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#deepfry
வாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)

#deepfry
வாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. வாழைத்தண்டு - சிறியது
  2. 10சின்ன வெங்காயம்
  3. 5பூண்டு பல்
  4. 2பச்சை மிளகாய்
  5. 2வர மிளகாய்
  6. 2 ஸ்பூன்கடலைப்பருப்பு
  7. 2பொட்டுக்கடலை
  8. 3 ஸ்பூன்தேங்காய் துருவல்
  9. 1 ஸ்பூன்சோம்பு
  10. 3பட்டை
  11. 1/2 ஸ்பூன்கசகசா
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாழைத் தண்டை வட்டவட்டமாக நறுக்கி குக்கரில் போட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடு ஏறியவுடன் இரண்டு ஸ்பூன் கடலை பருப்பை போட்டு வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சோம்பு, பட்டை, கசகசா போட்டு தாளிக்கவும். பிறகு வரமிளகாய், பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.

  4. 4

    பிறகு இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலைபோட்டு தாளிக்கவும். பிறகு 5 பல் பூண்டு,10 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் 3 ஸ்பூன் தேங்காய் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும்.

  5. 5

    எல்லாம் நன்றாக வதங்கியதும் அவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.

  6. 6

    பிறகு அதே மிக்ஸி ஜாரில் வேக வைத்த வாழைத்தண்டை தண்ணீர் பிழிந்துவிட்டு இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

  7. 7

    பிறகு அந்த மாவில் அரை ஸ்பூன் உப்பு போட்டு பிசையவும். பிறகு வறுத்த கடலைப்பருப்பு பவுடரை அதில் போட்டு பிசையவும். பிறகு கொத்தமல்லி கறிவேப்பிலையை போட்டு நன்றாக பிசையவும்.

  8. 8

    பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கோலா உருண்டைகளை அதில் போட்டு வேகவிடவும்.ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்..

  9. 9

    சுவையான வாழைத்தண்டு கோலா உருண்டை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes