வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai Recipe in Tamil)

lidiya nancy
lidiya nancy @cook_23514873

வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
3 பேர் சாப்பிடலாம்
  1. 2வாழைக்காய்
  2. 1 பட்டை
  3. 2கிராம்பு
  4. 5 துண்டு தேங்காய்
  5. 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  6. 2பச்சை மிளகாய்
  7. 3 சின்ன வெங்காயம்
  8. 1 ஸ்பூன் சோம்பு
  9. 1 ஸ்பூன் சீரகம்
  10. சிறிதளவுகசகசா
  11. தேவையானஅளவு உப்பு
  12. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு குக்கரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் 2 வாழைக்காயை 2 விசில் வரும் அளவு வேக வைக்கவும்.

  2. 2

    சிறிது நேரம் கழித்து, அந்த வாழைக்காயின் தோலை உரித்து எடுக்கவும்.

  3. 3

    வாழைக்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    சிறிது துருவிய வாழைக்காயுடன், அனைத்துப் பொருள்களையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  5. 5

    அரைத்து வைத்த மசாலாவுடன் மீதமுள்ள வாழைக்காயை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

  6. 6

    பிறகு, சின்ன சின்ன உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.

  7. 7

    ஒரு வாணலில் பொறிப்பதர்க்கு தேவையான அளவு எண்ணெய்யை எடுத்து மிதமானத் தீயில் சூடுப்படுத்திக்கொள்ளவும்.

  8. 8

    எண்ணெய் சூடான பின் மிதமான தீயில் அந்த உருண்டைகளை பொரித்து எடுக்கவும்.

  9. 9

    இப்பொழுது சுவையான வாழைக்காய் கோலா உருண்டை தயார்......😘

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
lidiya nancy
lidiya nancy @cook_23514873
அன்று

கமெண்ட் (2)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
வணக்கம்உங்கள் ரெசிபியை எங்களோடு பதிவு செய்ததற்கு நன்றி ! உங்க பதிவில் சிறு திருத்தம் செய்ய வேண்டுகிறோம் . எங்கள் முகநூல் அல்லது வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து எங்களை அறிய தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் குக்பேட் தமிழ் குறித்த தகவல்களை அறியுங்கள்https://www.facebook.com/groups/cookpadtamil/
https://chat.whatsapp.com/Ev5S0g3oOfS20T7TP6QuVT - குக்பேட் கம்யூனிட்டி டீம்

Similar Recipes