சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)

# steam
சுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம்.
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steam
சுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு டம்ளர் அரிசி கால் டம்ளர் கொஞ்சம் அதிகமாக துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி கொள்ளவும். பிறகு 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
- 2
20 சிறிய வெங்காயம் முழுதாக உரித்து கொள்ளவும். இரண்டு சிறிய அளவு தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். சுரைக்காயை தோல் நீக்கி 2 கப் அளவிற்கு அரிந்து வைத்துக் கொள்ளவும். 1/4 கப் தேங்காய் துருவலில் ஒரு இன்ச் பட்டை மற்றும் மூன்று கிராம்பு சேர்த்து நைசாக மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். புளியை ஊறவைத்து ஒரு கப் அளவிற்கு தண்ணீராக கரைத்துக் கொள்ளவும். 3 ஸ்பூன் சாம்பார் தூள் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயத்தூள் நல்லெண்ணெய் எடுத்து வைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மற்றும் உளுத்தம் பருப்பு, இரண்டு வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து பொரியவிடவும். அதில் வெங்காயம் சேர்த்து 30 செகண்டு வணக்க. பிறகு தக்காளி சேர்க்கவும். இரண்டும் இரண்டு நிமிடம் வதங்கிய பிறகு அரிந்து வைத்த சுரக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.காய் நன்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள்,உப்பு சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் சாம்பார் தூள் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 4
வதக்கிய இவற்றை அரைமணி நேரம் ஊறிய அரிசி பருப்பில் சேர்க்க.அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் சேர்க்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது கொதிக்கும் வரை சூடுபடுத்தவும். பிறகு கரண்டியால் ஒரு முறை நன்கு கிளறி விடவும்.ஒரு குக்கர் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அரிசி பாத்திரத்தை அதில் வைத்து தட்டு போட்டு மூடவும். இப்போது குக்கர் மூடியை மூடி வெயிட் சேர்க்கவும். 2 விசில் வந்தவுடன் அடுப்பை 15 அல்லது 20 நிமிடம் வரை சிம்மில் வைக்கவும்.
- 5
ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து சாதம் வெந்த பாத்திரத்தை வெளியில் எடுக்கவும். மீண்டும் அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அதில் வைக்கவும்.கரைத்து வைத்த ஒரு கப் புளித் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து விட்டு 3 அல்லது 4 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை மற்றும் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து விடவும். இப்போது 3 ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூடாக அப்பளம் அல்லது வடகதுடன் பரிமாறவும். சுவையான சுரைக்காய் சாம்பார் சாதம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாமை சாம்பார் சாதம்
#3M#Ilovecookingசிறுதானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.இவற்றில் பொங்கல், உப்புமா, கஞ்சி, சாதம், சாம்பார் சாதம் போன்ற பலவகை உணவுகள் செய்யலாம். இன்று சாமை சிறு தானியம் வைத்து சாம்பார் சாதம் செய்தேன். நம்மிடம் உள்ள காய்கள் வைத்து செய்யலாம்.இதற் கான காய்கள் கூட வெங்காயம் தக்காளி சேர்க்க வேண்டும். Meena Ramesh -
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன். Meena Ramesh -
எளிமையான வரகு சாம்பார் சாதம் (varagu sambar sadam recipe in tamil)
#Meena Ramesh(1 pot 🍯recipie)இன்று ஒருவருக்கு என்ன செய்வது என்று குழப்பம் ஆனால் கொஞ்சமாக செய்ய வேண்டும் எளிதாக இருக்கவேண்டும். ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். சுவையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அரை மணி நேரத்தில் சுவையான ஆரோக்கியமான எளிதான வரகு சாம்பார் சாதம் தயார் செய்துவிட்டேன். நானே எதிர்பார்க்காத அளவுக்கு மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#apஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன். Meena Ramesh -
-
வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் அதுவும் பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டோம் என்றால் வயிறு புண் ஆறிவிடும். வாழை மரத்தில், காய்க்கும் ,காய்,கனி ,தண்டுகள் வாழை இலை, வாழை பூ அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வகை உணவாகும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு அல்லது வாழை பூ வாழை காய் இவற்றை செய்து சாப்பிடவும்.வாழை காய் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. எது செய்தாலும் வயதானவர்கள் என்றால் எண்ணெய் காரம் புளிப்பு உப்பு குறைவாக சேர்த்து செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சிறிய வயது இளம் வயது இவர்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சுவை தேவைப்படும். என்னுடைய தாழ்மையான கருத்து இது. Meena Ramesh -
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
உடனடி சுரைக்காய் இட்லி (Suraikkai idli Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள்காலையில் கையில் அரைத்த மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக செய்யலாம் இந்த சுரைக்காய் இட்லி. சுரைக்காய் சேர்த்து ஆவியில் வேக வைப்பதால் அனைத்து வயதினருக்கும் நல்லது . Sowmya Sundar -
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
சுரைக்காய் கிரேவி (Suraikkaai gravy recipe in tamil)
#momசுரைக்காய் ஒரு நீர்ச்சத்து உடையது. தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் சுரைக்காய் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கரு உண்டானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை இந்த சுரைக்காயை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு கால்கள் வீக்கமாக இருக்கும் அப்போது இந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும். Priyamuthumanikam -
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)
#poojaசுவாமி நைவேத்தியத்திற்கு எப்படி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்ப்பது இல்லையோ அதேபோல் புழுங்கல் அரிசி சாதமும் சேர்க்க மாட்டோம். விரத நாட்களில் பச்சரிசி சாதம் மட்டுமே செய்வோம். மற்றும் வெறும் நாட்களில் புழுங்கல் அரிசியில் இதுபோன்ற கலவை சாதம் செய்வோம்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு பச்சரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து கொஞ்சமாக தயிர் சேர்த்து இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து சாதம் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
#poojaவெங்காயம் சேர்க்காத உளுந்து போண்டா. நாங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் திருவாதிரை பூஜைக்கு செய்வது. இதனுடன் இனிப்பு கச்சாயம் சுடுவோம். அதன் ரெசிபி கொடுத்துள்ளேன்.உளுந்து போண்டா வில் வெங்காயம் சேர்க்காமல் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் சேர்த்து உளுந்து மாவில் போடப்படும் போண்டா. Meena Ramesh -
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
-
நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
இந்த குழம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது நூல்கோல் காய் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பச்சை பட்டாணி கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன். Meena Ramesh -
-
-
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
#steamஇது கர்நாடக மாநிலத்தின் உணவு வகை அகும்.இதில் பருப்பு வகைகள் சேர்ப்பதால் காலைஉணவிற்கு ஏற்றது.காலை சுறுசுறுப்புடனும் சக்தியுடன் வேலை செய்ய ஏற்ற புரத சத்து மிகுந்த ஆவியில் வேக வைத்த உணவு ஆகும்.மேலும் இதில் கீரை மிளகு இஞ்சி சீரகம் பெருங்காயம் சேர்த்து இருப்பதால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கிருமிகள் தொற்று உண்டாகாது.நான் சுவைக்காக கார்ன் சேர்த்து உள்ளேன். Meena Ramesh -
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
- வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
கமெண்ட்