தட்டவடை (Thatta vadai recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

தட்டவடை (Thatta vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1 கிலோ பொன்னி அரிசி
  2. 100 கிராம் பொட்டுக்கடலை
  3. 30 மில்லி நெய் அல்லது பட்டர்
  4. 1 கைப்பிடி அளவு கடலைப்பருப்பு
  5. 2 ஸ்பூன் கருப்பு எள்ளு
  6. 1 ஸ்பூன் சீரகம்
  7. 1 ஸ்பூன் ஓமம்
  8. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. 12 வரமிளகாய்
  10. உப்பு தேவையான அளவு
  11. கறிவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    அரிசி ஐ மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கிரைண்டரில் போட்டு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைக்கவும் நைசானதும் உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுக்கவும்

  2. 2

    கடலைப்பருப்பு ஐ ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தண்ணீர் வடிகட்டி அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    சீரகம் ஓமம் இரண்டையும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி அரிசி உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் நெய் அல்லது பட்டர் ஐ சூடாக்கி மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    பின் பொட்டுக்கடலை ஐ மிக்ஸியில் போட்டு பொடித்து பின் ஜலித்து சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  6. 6

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் பாலீதீன் கவரில் சிறிது எண்ணெய் தடவி கொண்டு அதில் இந்த உருண்டை ஐ வைத்து அழுத்தவும்

  7. 7

    பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes