எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 3 வேக வைத்த முட்டை
  2. 2நறுக்கிய வெங்காயம்
  3. 1பெரிய நறுக்கிய தக்காளி
  4. 1 டேபிள்ஸ்பூன் இடிச்ச பூண்டு
  5. 1/2 டேபிள்ஸ்பூன் இடிச்ச இஞ்சி
  6. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1 டீஸ்பூன் தனியாத்தூள்
  8. 3/4 டீஸ்பூன் கரம் மசாலா
  9. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1 டீஸ்பூன் மிளகு தூள்
  11. உப்பு
  12. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இடிச்ச பூண்டு, இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் நன்றாக வதக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்

  2. 2

    வெங்காயம் 2 நிமிடம் வதக்கிய பிறகு ஒரு நிமிடம் மூடி வைத்து வேகவிடவும் பிறகு இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்

  3. 3

    பச்சை வாசனை போன பிறகு தக்காளி உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும் தக்காளி மசிந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்

  4. 4

    வேக வைத்த முட்டை சேர்த்து மசாலா எல்லா பக்கமும் பரவும் வரும் முட்டையை கிளறி குறைந்த தீயில் மூடி வைத்து 2 நிமிடம் வைக்கவும்

  5. 5

    2 நிமிடம் கழித்து பரிமாறவும் இது இட்லி,தோசை, சப்பாத்தி பரோட்டா, பிரியாணி, ஆப்பம், இடியாப்பம் என அனைத்து வகைக்கும் ஏற்றது

  6. 6

    சுவையான நாடன் முட்டை வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes