அக்கி ரெட்டி (Akki rotti recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#karnataka
கர்நாடகாவில் காலை சிற்றுண்டி உணவாக இந்த அக்கி ரொட்டியை செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

அக்கி ரெட்டி (Akki rotti recipe in tamil)

#karnataka
கர்நாடகாவில் காலை சிற்றுண்டி உணவாக இந்த அக்கி ரொட்டியை செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 நபர்கள்
  1. 1 கப்அரிசி மாவு
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. 1 ஸ்பூன்சீரகம்
  5. 1 ஸ்பூன்ஓமம்
  6. இஞ்சி சிறிய துண்டு
  7. கருவேப்பிலை தேவையான அளவு
  8. கொத்தமல்லி தேவையான அளவு
  9. 1/4 ஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் அரிசி மாவை போடவும். பிறகு ஓமம் சீரகம், துருவிய இஞ்சி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போடவும்.பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையை போடவும்.

  3. 3

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போடவும். தேவையான அளவு உப்பு போட்டு எல்லாத்தையும் நன்கு கிளறவும்.பிறகு தண்ணீர் தெளித்து தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 2 நிமிடம் ஊற வைக்கவும்.

  4. 4

    அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைக்கவும். பிறகு பிசைந்து வைத்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி ஒரு உருண்டையை அதில் வைத்து கையால் வட்டவடிவமாக தட்டி அதன் நடுவில் ஒரு ஓட்டை போடவும்.

  5. 5

    தோசைக் கல் சூடானதும் இலையில் தட்டி வைத்த ரொட்டியை இலையோடு சேர்த்து அந்த தோசை கல்லின் மேல் வைத்து ஒரு நிமிடம் கழித்து இலையை எடுத்து விடவும். பிறகு ஒரு ஸ்பூன் எண்ணையை ரெட்டி யை சுற்றி விடவும்.பிறகு ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    சுவையான கர்நாடகா அக்கி ரொட்டி தயார். இதற்கு சைட் டிஷ் தக்காளி சட்னி நல்லா இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes