தேவையான பொருட்கள்

30-40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. சிக்கன் ஊற வைக்க
  2. 1/2 கிலோ எலும்பில்லாத சிக்கன்
  3. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. 2 டீஸ்பூன் தயிர்
  5. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. கிரேவி செய்ய
  8. 2+ 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  9. 1 பட்டை
  10. 2 லவங்கம்
  11. 1 அன்னாச்சிப்பூ
  12. 1நறுக்கிய வெங்காயம்
  13. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. 1 பெரிய தக்காளி விழுது
  15. 3/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  16. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  17. 7-10 முந்திரி (20 நிமிடம் ஊற வைக்கவும்)
  18. 1 பச்சை மிளகாய்
  19. உப்பு
  20. சிறிதுசர்க்கரை
  21. 1+1 டேபிள்ஸ்பூன் ப்ரஷ் க்ரீம்
  22. சிறிதுகஸ்தூரி மேத்தி

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை நன்றாக கழுவி அதனுடன் மிளகாய்த்தூள் தயிர் மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்க்கவும்

  2. 2

    வெண்ணெய் உருகிய பிறகு ஊற வைத்த சிக்கனை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்

  3. 3

    மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்க்கவும் அதனுடன் பட்டை லவங்கம் அன்னாசிப்பூ சேர்க்கவும் பிறகு இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

  4. 4

    பிறகு இது தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒருமுறை நன்றாக கிளறவும்

  5. 5

    பிறகு வறுத்த சிக்கனை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்

  6. 6

    மிக்ஸியில் ஊற வைத்த முந்திரி பருப்பை சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும் பிறகு முந்திரிபருப்பு விழுதை அதனுடன் சேர்க்கவும் 200 மிலி அளவு தண்ணீர் ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும்

  7. 7

    உப்பு சர்க்கரை சேர்த்து மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்

  8. 8

    எண்ணெய் பிரிந்து கிரேவி கெட்டியானதும் இதில் காய்ந்த கஸ்தூரி மேத்தியும் சேர்க்கவும் பிறகு அடுப்பை அணைத்து இதில் ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும்

  9. 9

    சுவையான பஞ்சாபி பட்டர் சிக்கன் தயார் இதை நான் ரொட்டியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes