எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 4மீடியம் அளவு உருளை கிழங்கு
  2. 1பெரியவெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 2பச்சை மிளகாய்
  5. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  6. 1ஸ்பூன் கடுகு
  7. 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  8. 1ஸ்பூன் வரமிளகாய் தூள்
  9. 2ஸ்பூன் வர கொத்தமல்லித்தூள்
  10. 1/2ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  11. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. உப்பு தேவையான அளவு
  13. கருவேப்பிலை சிறிதளவு
  14. கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு
  15. அரைக்க
  16. 1/4 கப் தேஙகாய் துருவல்
  17. 1 இன்ச் பட்டை
  18. 3கிராம்பு
  19. கொஞ்சம்கல்பாசி
  20. 1ஸ்பூன் சோம்பு
  21. 2ஸ்பூன் கசகசா
  22. 6 பூண்டுப் பல்
  23. ஒரு துண்டு இஞ்சி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பிரஷர் பானில் நாலு உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சதுர வாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும். அரைக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். 2 தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.இரண்டு பச்சை மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளவும்.ஒரு பெரிய வெங்காயத்தை சன்னமாக அறிந்து கொள்ளவும்.

  2. 2

    உருளைக்கிழங்கு வேகவைத்த பிரஷர் பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சேர்த்து சிவந்தவுடன் பச்சை மிளகாய் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கிய பிறகு அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் மஞ்சள் தூள், வரமிளகாய்த்தூள், கொத்தமல்லித் தூள், கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    பூண்டுப்பல், இஞ்சி, கசகசா, பட்டை, லவங்கம், கல்பாசி, சோம்பு, தேங்காய் துருவல்இவற்றை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மைய விழுதாக அரைத்துக் கொள்ளவும். விழுதை வேக வைத்த உருளைக்கிழங்கு உடன் சேர்த்து தாளித்த வெங்காயத்தில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு 5 நிமிடம் வரை கொதிக்க விடவும். பொடியாக அரிந்த கொத்தமல்லி தலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  4. 4

    சுவையான உருளைக்கிழங்கு தக்காளி குருமா தயார் இட்லி தோசை மற்றும் பூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். புலாவ், ஃப்ரைட் ரைஸ், போன்ற உணவுகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes