பாசி பருப்பு அரிசி உசிலி (Paasiparuppu arisi usili recipe in tamil)

#onepot
இது டிபன் அயிட்டம். இது காலை அல்லது இரவு டிபனுக்கு செய்யலாம். நாங்கள் விரத நாளன்று இரவு உணவிற்கு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும். சாதம் உதிரியாக வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். குழைய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தண்ணீர் அதற்கு தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும்.
பாசி பருப்பு அரிசி உசிலி (Paasiparuppu arisi usili recipe in tamil)
#onepot
இது டிபன் அயிட்டம். இது காலை அல்லது இரவு டிபனுக்கு செய்யலாம். நாங்கள் விரத நாளன்று இரவு உணவிற்கு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும். சாதம் உதிரியாக வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். குழைய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தண்ணீர் அதற்கு தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை அரிசியை வெறும் வாணலியில் நன்கு வறுத்துக் கொள்ளவும் படத்தில் காட்டியுள்ளபடி. அதேபோல் தனியாக கால் கப் பாசிப்பயறை சிவக்க வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக தண்ணீரில் கழுவி 15 நிமிடம் வரை ஊற வைக்கவும். ஊற வைக்காமலும் செய்யலாம்.
- 2
ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும். சிவந்தவுடன் 4 அல்லது 5 வரமிளகாயை கிள்ளி சேர்க்கவும். மிளகாய் சிவந்தவுடன் ஒன்றுக்கு மூன்றரை அல்லது நான்கு தம்ளர் தண்ணீர் சேர்க்கவும். ஒரு டம்ளர் அரிசிக்கு 3.5 அல்லது நான்கு டம்ளர் தண்ணீர் கணக்கு. 4 டம்ளர் தண்ணீர் சேர்த்தால் கொஞ்சம் குழய வேகும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
- 3
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்த அரிசி பருப்பை சேர்த்துக் கொள்ளவும். அரிசி பருப்புடன் தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை மிதமான தீயில் மூடி வைக்கவும். 20 நிமிடம் வேக வைக்கவும். நடுவில் இரண்டு முறை திறந்து நன்கு கிளறி விடவும். அரிசி நன்கு வெந்த உடன் உசிலி தயாராகிவிடும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வைத்தால் சாதம் நன்கு வேகும். 3.5 தண்ணீர் சேர்த்தால் சாதம் குழையாமல் இருக்கும். எப்படி வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் சுவையாக இருக்கும். சுவையான பாசி பருப்பு உசிலி தயார்
- 4
இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை புளி சுவையாக இருக்கும் அல்லது பொட்டு கடலை தேங்காய் சட்னி தொட்டுக் கொள்ளலாம். சர்க்கரை கூட தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி உப்புமா type 3(rice upma recipe in tamil)
#arisi uppumaஎங்களுக்கு மிகவும் பிடித்த டிஃபன்.விறத தினம் அன்று இதை தான் செய்வோம் இரவு உணவிற்கு. Meena Ramesh -
-
நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)
#ed3 # இஞ்சிஅரிசி மாவை விதவிதமாக வேறு மாதிரி செய்யலாம். ஆவியில் வேக விட்டு செய்யலாம். அடையாக தட்டி செய்யலாம் .தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். கடலை மாவு சேர்த்து செய்யலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இப்படி பல வகையாக பச்சரிசி கொண்டு அரிசி உப்புமா செய்யலாம் எப்படி செய்தாலும் அரிசி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் முக்கியமாக இதை விரத நாட்களில் இரவு உணவிற்கு செய்வோம். அன்று புழுங்கலரிசி சாப்பிடமாட்டோம். இன்று பச்சை நோய் அரிசியில் இஞ்சி சேர்த்து தேங்காய் சேர்த்து இந்த அரிசி உப்புமா செய்தேன். Meena Ramesh -
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
-
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
-
மலேசிய வறுத்த அரிசி வெர்மிசெல்லி (Malaysia varutha arisi vermicelli recipe in tamil)
இது குழந்தைகளுக்கு மசாலா அல்லாத பிடித்த உணவு. சிறந்த காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சூடாக பரிமாறவும்#Onepot Christina Soosai -
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
-
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
பச்சரிசி தேங்காய் சாதம் (Pacharisi satham recipe in tamil)
#poojaஇந்தத் தேங்காய் சாதத்தில் முந்திரிப்பருப்பு அல்லது வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளித்து கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
குதிரைவாலி அரிசி கிச்சடி (Kuthuraivali arisi kichadi Recipe in Tamil)
#nutrient3 குதிரைவாலியில் மற்ற சிறு தானியங்களை விட இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும், மலச்சிக்கலை தடுப்பதிலும், ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. உடலைச் சீராக வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் அதுவும் பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டோம் என்றால் வயிறு புண் ஆறிவிடும். வாழை மரத்தில், காய்க்கும் ,காய்,கனி ,தண்டுகள் வாழை இலை, வாழை பூ அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வகை உணவாகும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு அல்லது வாழை பூ வாழை காய் இவற்றை செய்து சாப்பிடவும்.வாழை காய் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. எது செய்தாலும் வயதானவர்கள் என்றால் எண்ணெய் காரம் புளிப்பு உப்பு குறைவாக சேர்த்து செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சிறிய வயது இளம் வயது இவர்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சுவை தேவைப்படும். என்னுடைய தாழ்மையான கருத்து இது. Meena Ramesh -
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
இட்லி எள்ளு சட்னி (Idli Ellu Chutni Recipe in TAmil)
#ebook#இரவு நேர உணவு வகைகளில் இட்லி சட்னி பற்றி இவ பாக்க போறோம் எள்ளு சட்னி எப்படி கொண்டுவருவது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
வரகு அரிசி பருப்பு சாதம்(varagu arisi paruppu saadam recipe in tamil)
#m2021சிறுதானியத்தை பயன்படுத்தி கஞ்சி இட்லி தோசை பொங்கல் மிஞ்சுனா ஸ்நேக்ஸ்க்கு கேக் பிஸ்கட் முறுக்கு இப்படி இதே ஐட்டத்த திரும்ப திரும்ப செய்து கொடுத்து வீட்டுல இருக்கிறவங்க சாப்பிட்டு சலித்து விட்டது சிறுதானியத்தை எப்படி செய்தாலும் வீட்டுல இருக்கறவங்கள சாப்பிட வைக்க முடியவில்லை சரி கொஞ்சம் மாற்றி செய்து பார்க்கலாம் என்று சிறு முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது வீட்டுல எல்லாருடைய பாராட்டையும் பெற்று தந்தது Sudharani // OS KITCHEN -
பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி . Meena Ramesh -
சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை
#immunityமிகவும் சத்தான சுவையான கலவையான பருப்புகள் நிறைந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை Sowmya -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
திப்ப ரொட்டி.(Dippa ரொட்டி) (Dippa rotti recipe in tamil)
#apஆந்திர மக்கள் செய்யும் காலை உணவாகும். இதை ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடுவார்கள். உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் டிபன் வகை ஆகும். இதன் சுவை கிட்டத்தட்ட நமது காஞ்சிபுரம் இட்லியை போன்று உள்ளது. இந்த மாவை உடனடியாக செய்து கொள்ளலாம். அல்லது இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து செய்து கொள்ளலாம். 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டியது இல்லை. Meena Ramesh
More Recipes
கமெண்ட்