பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.

#GA4 #week6
#ga4 Paneer

பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)

இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.

#GA4 #week6
#ga4 Paneer

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 200 கிராம்பன்னீர்
  2. 50 கிராம்வெண்ணை
  3. 6தக்காளி
  4. 1 டேபிள் ஸ்பூன்முந்திரி
  5. 2வெங்காயம்
  6. 2 டீஸ்பூன்மல்லித்தூள்
  7. 1/2 டீஸ்பூன்கரம் மசாலா
  8. 1 டீஸ்பூன்சர்க்கரை
  9. 1 1/2 டீஸ்பூன்காஷ்மீரி மிளகாய்த்தூள்
  10. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் தக்காளி மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தக்காளி தோல் உரிந்து வந்தவுடன் தனியாக எடுத்து ஆற விட வேண்டும்.

  2. 2

    பிறகு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து வெண்ணை உருகிய உடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கண்ணாடி பதத்தில் வதக்கினால் போதுமானது.

  3. 3

    தக்காளி நன்கு ஆறிய பிறகு தோலை உரித்து ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்து உரித்த தக்காளி, முந்திரி மற்றும் வதக்கிய வெங்காயம் மூன்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு தக்காளி, முந்திரி, வெங்காயம் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    அதனுடன் கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் மல்லித்தூள் சேர்க்க வேண்டும்.

  6. 6

    சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். ஒரு மூடி போட்டு மூடி வேக விடவும்.

  7. 7

    கிரேவி நன்கு கொதித்த பின் பன்னீர் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

  8. 8

    சிறிதளவு கசூரி மேத்தி சேர்க்க வேண்டும் நன்கு கலந்து விட்ட பிறகு பிரஷ் க்ரீம் சேர்த்து இறக்க வேண்டும்.

  9. 9

    கிரீமியான பன்னீர் பட்டர் மசாலா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes