முளைகட்டிய பாசிப் பயிறு கத்திரிக்காய் கூட்டு

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கத்திரிக்காய் 2
  2. ஒரு கைப்பிடி அளவு முளைக்கட்டிய பாசிப்பயறு
  3. ஒரு தக்காளி
  4. 10 பல் பூண்டு
  5. 10 சிறிய வெங்காயம்
  6. சாம்பார் தூள் 2 டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  9. கடுகு ஒரு ஸ்பூன்
  10. சீரகம் அரை டீஸ்பூன்
  11. கருவேப்பிலை சிறிதளவு
  12. கொத்தமல்லி இலை சிறிதளவு
  13. பெருங்காயம் அரை டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முளைக்கட்டிய பாசி பெயரை ஒரு விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும். சிறிய வெங்காயம் பூண்டு இவற்றை தோலுரித்து தயாராக எடுத்துக் கொள்ளவும். கத்திரிக்கயை நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் கடுகு வெங்காயம் தக்காளி பூண்டு இவற்றை வதக்கவும். பிறகு கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்

  3. 3

    கத்திரிக்காயை சிறிது வதங்கியதும் உப்பு மஞ்சள் சாம்பார் தூள் இவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்த முளைகட்டிய பாசிப்பயறு சேர்க்கவும்

  4. 4

    கத்தரிக்காயை முழுகும் அளவிற்கு தண்ணீர் விட்டு கூட்டை கொதிக்கவிடவும். இதில் கத்தரிக்காய் வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

  5. 5

    சுவையான முளைக்கட்டிய பாசிப்பயறு கத்திரிக்காய் கூட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes