கிரில்டு மசாலா எக் பஜ்ஜி (Grilled Masala Egg Bajji Recipe in Tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#GRAND2
#WEEK2
முட்டையை அவித்து மசாலா தடவி க்ரில் செய்து பிறகு பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 4 முட்டை
  2. கால் கப் கடலை மாவு
  3. 3 ஸ்பூன் அரிசி மாவு
  4. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. ரெண்டு ஸ்பூன் மிளகாய் தூள்
  6. ஒரு ஸ்பூன் மிளகுத் தூள்
  7. ஒரு சிட்டிகை சோடா உப்பு
  8. கால் ஸ்பூன் சீரகம்
  9. ஒரு பெரிய வெங்காயம்
  10. 8 பல் பூண்டு
  11. தேவையானஅளவு உப்பு
  12. தேவையானஅளவு தண்ணீர்
  13. பொரிப்பதற்கு சமையல் எண்ணை
  14. ஒரு கொத்து கருவேப்பிலை
  15. ஒரு கொத்து கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முட்டையை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும் முட்டை கோட்டிங் செய்ய ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் அரை ஸ்பூன் மிளகு தூள் கொஞ்சம் உப்பு ஒரு ஸ்பூன் கார்ன் மாவு 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி முட்டையின் மீது எல்லா இடமும் படும்படி நன்கு தடவி விடவும்

  2. 2

    கோட்டின் செய்த முட்டையை போக் கரண்டியால் குத்தி நேரடியாக அடுப்பில் காட்டி எல்லா பக்கங்களும் நன்கு வாட்டி வைக்கவும்

  3. 3

    வாட்டி எடுத்த முட்டையை இரண்டாக அல்லது நான்காக வெட்டி வைக்கவும் பஜ்ஜி மாவு தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகுத்தூள் சோடா உப்பு தேவையான அளவு உப்பு பொடியாக நறுக்கிய பூண்டு

  4. 4

    கேரட் துருவலில் வைத்து சீவிய வெங்காயத்தை சேர்க்கவும் ஒரு கொத்து கருவேப்பிலை சீரகம் சேர்த்து நன்கு கிளறி பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலக்கவும்

  5. 5

    முட்டை துண்டுகளை கடலைமாவு கலவையில் தோய்த்து எடுத்து எண்ணெயைக் காயவைத்து அதில் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு பொரித்தும் எடுக்கவும் எக் மசாலா பஜ்ஜி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes