பால் கோவா (Palkova recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

பால் கோவா (Palkova recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 லிட்டர் ஃபுல் க்ரீம் மில்க்
  2. 1 ஸ்பூன் சோளமாவு
  3. 1/8 ஸ்பூன் வினிகர்
  4. 200 கிராம் சர்க்கரை
  5. 1 துளி ரோஸ் வாட்டர்
  6. 1/2 ஸ்பூன் ஏலத்தூள்
  7. 4 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும் பாதியாக சுண்டியதும் மிதமான தீயில் வைத்து கிளறவும்

  2. 2

    பின் வினிகர் சேர்த்து பால் திரிந்ததும் தொடர்ந்து கிளறவும்

  3. 3

    பின் பால் கால் பாகம் வரை சுண்டியதும் சோளமாவை சிறிது ஆறிய பாலில் கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி தொடர்ந்து கிளறவும்

  4. 4

    பின் சர்க்கரை சேர்த்து கிளறவும் சர்க்கரை கரைந்து இளகி பின் சேர்ந்து திக்காக வரும் போது ஏலத்தூள் நெய் விட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி ஆறவிடவும்

  5. 5

    பின் ஆறிய பிறகு துண்டுகள் போடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes