கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)

தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால்.
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால்.
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய காய்கறிகளை படத்தில் காட்டியவாறு அரிந்து கொள்ளவும்.இந்த காய்கறிகளுடன் கொத்தவரங்காய் சேனைக்கிழங்கு சேப்பங்கிழங்கு கத்திரிக்காய் முருங்கைக்காய் போன்ற காய்களும் சேர்த்துக் கொள்ளலாம்.வேகவைக்கும் பருப்பு மற்றும் சேர்க்கும் காய்கறிகளின் எண்ணிக்கை வகைகளுக்கு தகுந்தார்போல் காய்கறிகளின் அளவுகளை சேர்த்துக் கொள்ளவும். மொச்சைக் கொட்டையை தனியாக குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு துவரம் பருப்பை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிரஷர் பானில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெண்டைக்காயை முதலில் வதக்கிக் கொள்ளவும்.பிறகு எல்லா காய்கறிகளையும் சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும்.
- 3
வதக்கிய காய்கறிகளுடன் சாம்பார்தூள் உப்பு கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். நன்கு பிரட்டி விடவும். பிறகு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும். பிறகு குக்கரை மூடி வெயிட் சேர்த்து இரண்டு சவுண்ட் விடவும். காய் நன்கு வெந்துவிடும்
- 4
இப்போது வேக வைத்த பச்சை மொச்சை அதில் சேர்த்துக் கொள்ளவும். கலந்து விட்டு வேக வைத்த பருப்பை சேர்த்து கொள்ளவும். ஒரு ஐந்து நிமிடம் வரை மூடி வைத்து கொதிக்க விடவும். பிறகு கரைத்த புளித்தண்ணீரை சேர்த்து புளித்தண்ணீரில் பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- 5
கால் கப் தேங்காயை மிக்ஸியில் நைஸாக அரைத்து குழம்பில் சேர்க்கவும். பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் வரை வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். தாளிக்க கூறிய பொருட்களை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து குழம்பில் கொட்டவும். கடைசியாக பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும்.
- 6
சுவையான நாட்டுக் காய்கறி கதம்ப சாம்பார் தயார். பால் பொங்கலுடன் மட்டுமல்லாமல் கேரளா அரிசியுடன் இந்த குழம்பை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)
பாலைக்கீரையில் புளி இல்லாத சாம்பார் வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும் #samberrasam Sundari Mani -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam -
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)
இந்த சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
-
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் அதுவும் பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டோம் என்றால் வயிறு புண் ஆறிவிடும். வாழை மரத்தில், காய்க்கும் ,காய்,கனி ,தண்டுகள் வாழை இலை, வாழை பூ அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வகை உணவாகும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு அல்லது வாழை பூ வாழை காய் இவற்றை செய்து சாப்பிடவும்.வாழை காய் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. எது செய்தாலும் வயதானவர்கள் என்றால் எண்ணெய் காரம் புளிப்பு உப்பு குறைவாக சேர்த்து செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சிறிய வயது இளம் வயது இவர்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சுவை தேவைப்படும். என்னுடைய தாழ்மையான கருத்து இது. Meena Ramesh -
Sadhya sambar😋 *Sadhya sambar recipe in tamil)
#Keralaசத்ய சாம்பார் என்பது கலவை காய்கறிகள் கொண்டு செய்யப் படும் சாம்பார் ஆகும்.இது கேரளாவில் செய்யப்படும் மிகவும் பிரசித்தம் பெற்ற சாம்பார் ஆகும். பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் பரிமாறப்படும் காய் கலவை சாம்பார் ஆகும். எனக்கு மிகவும் பிடிக்கும்.இதற்கு சாம்பார் தூள் தேவை இல்லை நல்ல நிறம் கொண்ட வரமிளகாய் தூள் அல்லது காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித் தூள் கொண்டு செய்ய வேண்டும். காய்கள் அரியும் போது கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். (படத்தில் காட்டியுள்ளபடி) Meena Ramesh -
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த வகை சாம்பார் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
சௌசௌ சாம்பார்(chow chow sambar recipe in tamil)
#welcomeஆரோக்கியமான சௌசௌ சாம்பாரில் புரதச்சத்து நீர்ச்சத்து உள்ளது. Sasipriya ragounadin -
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன். Meena Ramesh
More Recipes
- தேங்காய் திரட்டுப்பால் (Thenkaai thirattu paal recipe in tamil)
- ஆலூ ஃபிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (Aloo FrenchBeans Sabzi recipe in tamil)
- வேர்க்கடலை பர்பி (Verkadalai burfi recipe in tamil)
- ஸ்வீட் பொங்கல் (Sweet pongal recipe in tamil)
- சேலம் குகை பச்சை மொச்சைக் கொட்டை குழம்பு (Pachai mochai kottai kulambu recipe in tamil)
கமெண்ட்